இந்தியாவில் ஆடி கார் வாங்கணும்னா 2020 டிசம்பர் மாசத்துக்குள்ள வாங்கிடுங்க….

10 November 2020, 5:21 pm
Audi India to hike prices from January 2021
Quick Share

அடுத்த ஆண்தில்  ஆடி கார் ஏதாச்சும் வாங்கலாம்னு நீங்கள் திட்டமிருந்தால் அதை மாற்றிக்கொண்டு இந்த ஆண்டு முடிவதற்குள் வாங்கி விடுங்கள். ஏனென்று….

இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதனாலும் மற்றும் முதலீட்டு செலவுகள் அதிகரித்து வரும் காரணத்தாலும் ஆடி இந்தியா நிறுவனம் தனது அனைத்து மாடல் வரம்பில் இரண்டு சதவீதம் வரை விலை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. புதிய உயர்த்தப்பட்ட விலைகள் 2021 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும்  அறிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், ஆடி இந்த ஆண்டு Q8, A8L, RS7 ஸ்போர்ட்பேக், RS Q8 மற்றும் Q2 போன்ற மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிராண்ட் சமீபத்தில் தான் Q8 செலிப்ரேஷன் மாடலை ரூ.98.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியது.

நிறுவனம் 2 + 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமும், 2 + 3 ஆண்டுகள் சாலையோர உதவியும் கொண்ட ஐந்தாண்டு சேவை தொகுப்புடன் தொகுக்கப்பட்ட Q2 க்கான ‘Peace of Mind’ தொகுப்பையும் வழங்குகிறது.

இது குறித்து பேசிய ஆடி இந்தியாவின் தலைவர் பல்பீர் சிங் தில்லான், ‘ஆடி இந்தியா நிறுவனத்தில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம், ஆனால் அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகள் மற்றும் நாணய மதிப்பு குறைப்பு போன்ற விஷயங்கள் எங்கள் செலவு கட்டமைப்புகளில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன, விலைகளில் திருத்தம் செய்ய வேண்டிய கட்டாய நிலைமைக்கு நாங்கள் தள்ளபட்டுளோம்”. 

அவர் மேலும் பேசுகையில், “ஜனவரி 1, 2021 முதல், எங்கள் மாடல் வரம்பில் இரண்டு சதவீதம் வரை விலை திருத்தம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு நிலைகளில் தாக்கத்தை குறைப்பதற்கு நாங்கள் முயற்சித்தாலும், தற்போதைய நிலைமையில் நிலையான வளர்ச்சிக்காக விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உரிமைக்கோரல்களை எளிதாக்கும் பல சேவை தொடர்பான தொகுப்புகளையும் நாங்கள் வழங்குகிறோம்.” என்று  தெரிவித்தார்.

Views: - 34

0

0