தப்பித்தவறிக்கூட +92 என்ற எண்ணில் தொடங்கி அழைப்புகள் வந்தால் எடுத்து விடாதீர்கள்!! ஏன் தெரியுமா?

17 August 2020, 9:32 am
Avoid calls from numbers starting with +92: Government
Quick Share

+92 இல் தொடங்கி ஒரு எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால், எக்காரணம் கொண்டும் அந்த அழைப்பை நீங்கள் எடுக்க வேண்டாம் என்று சைபர் பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்புக்கான உள்துறை அமைச்சகம் இந்திய குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

இது போன்ற அழைப்புகள், பெரும்பாலும் மோசடி செய்பவர்களிடமிருந்து வரக்கூடும். இந்த மோசடி அழைப்புகளுக்கு நீங்கள் பதிலளித்தால் அவர்கள் உங்கள் பணத்தை திருடிவிட்டு, எந்தவொரு தடயமும் இல்லாமல் தப்பித்து விடுவார்கள்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்:

ஆகஸ்ட் 10 அன்று வெளியிடப்பட்ட MHA இடமிருந்து வெளியான எச்சரிக்கை தகவலின்படி, +92 உடன் தொடங்கும் எண்களிலிருந்து சாதாரண அல்லது வாட்ஸ்அப் அழைப்பு என எது வந்தாலும் அதை தவிர்க்கச் சொல்லி எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்த +92 என்று தொடங்கும் எண்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு சேர்ந்தவையாகும்.

இது எண்களைப் பயன்படுத்துபவர்கள் பணத்தை திருடுவதற்குத் தேவையான OTP கள் அல்லது வங்கி உள்நுழைவு விவரங்கள் போன்ற ரகசியத் தரவுகளை உங்களை ஏமாற்றி பெறக்கூடும்.

மோசடி செய்பவர்கள், பல சந்தர்ப்பங்களில் நாம் ஏற்கனேவே பல செய்திகளில் பார்த்தது போல, தங்களை முறையானதாகக் காண்பிப்பதற்கும், சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு நபராக தங்களை அடையாளப்படுத்திக்கொண்டும் அல்லது பணத்தை வழங்குவதாக நம்ப வைத்தும் பலவிதமாக உங்களை ஏமாற்ற பல நுட்பங்களைப் பயன்படுத்தலாம்.

உதாரணமாக, அவர்கள் வங்கியின் பிரதிநிதி போலவோ, ஒரு அரசாங்க அதிகாரி போலவோ அல்லது பரிசு வழங்கும் ஒரு நிறுவன அதிகாரியாகவோ அல்லது அவசர பண உதவி தேவைப்படும் ஒரு நபராகவோ தங்களைக் காட்டிக்கொண்டு பேச்சுத்திறமையால்  உங்களை ஏமாற்ற முயற்சிப்பர்.

இதுபோன்றவர்களிடம் மோசடி என்று தெரியாமல் நீங்கள் உங்கள் விவரங்களைப் பகிர்ந்து கொண்டால், கண்ணிமைக்கும் உங்கள் காசையெல்லாம் களவாடி சென்று விடுவார்கள்.

பணத்தை நேரடியாக மற்றொரு (போலி) கணக்கிற்கு மாற்றுவதன் மூலமோ அல்லது ஆன்லைனில் ஏதாவது பொருளை வாங்குவதன் மூலமோ அவர்கள் உங்கள் கணக்கை சுத்தமாக துடைத்துவிடவும் கூட முடியும்.

இது போன்றவற்றில் நீங்கள் உங்கள் பணத்தை இழந்தால் பணத்தை திரும்பப் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

எனவே, MHA பரிந்துரைத்தபடி +92 உடன் தொடங்கும் எண்களின் அழைப்புகளை எப்போதும் தவிர்த்துவிடுங்கள். ஒருவேளை நீங்கள் தவறுதலாக பதிலளித்துவிட்டால், உங்கள் வங்கித்தகவல்களையோ அல்லது உங்களைப் பற்றிய தகவல்களையோ நீங்கள் ஒருபோதும் பகிர்ந்துவிடக்கூடாது. எந்வொரு வங்கியும் உங்களுக்கு போன் செய்து வங்கி விவரங்கள், OTP போன்றவற்றை எல்லாம் கேட்க மாட்டார்கள் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

உங்கள் தகவல்களை நீங்கள்  தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பணத்தைப் பறிகொடுத்துவிட்டு புலம்பி ஒரு பலனும் இல்லை. எச்சரிக்கையுடன் இருப்போம் ஏமாறாமல் இருப்போம். அக்கறையுடன் Updatenews360.