பெற்றோர்கள் இதை பண்ணலனா… உங்க குழந்தையோட ஆதார் கார்டு செல்லாமல் போயிடும்! | #BaalAadhaar
Author: Hemalatha Ramkumar29 August 2021, 8:54 am
இன்றைய காலகட்டத்தில் எங்கு சென்றாலும் எதற்கு சென்றாலும், முதல் அடையாளச் சான்றாக கேட்பது ஆதார் கார்டு தான். இது பெரியவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. சிறுவயதிலான குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.
இந்திய ஆதார் அமைப்பு குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெறுவது குறித்து அவ்வப்போது முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுகிறது. அதை பெற்றோர்கள் அறிந்துக்கொண்டு குழந்தைகளின் ஆதார் விஷயத்தில் கவனமாக இருப்பது மிக்வும் முக்கியம்.
அதன்படி, பெற்றோர்கள் முக்கியமான பால் ஆதார்கார்டு (BaalAadhaar) என்பதை பற்றி கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
பால் ஆதார் என்பது குழந்தை பிறந்தது முதல் 5 வயது வரை மட்டுமே செல்லுபடியாகும். அதற்கு இந்த பால் ஆதார் என்பது செயலிழந்துவிடும்.
அதற்கு பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
பால் ஆதார் எனப்படும் குழந்தைகளுக்கான ஆதார் கார்டில் சம்பந்தப்பட்ட குழந்தையின் பயோ மெட்ரிக் விவரங்கள் 5 வயதில் மீண்டும் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படி புதுப்பிக்கப்படவில்லை என்றால் ஏற்கனவே இருந்த பால் ஆதார் கார்டு செயலிழந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 5 வயது ஆனதும், ஆதார் சேவை மையங்களுக்குச் சென்று குழந்தைகளின் கைவிரல் ரேகை மற்றும் கருவிழியைப் பதிவு செய்து புதுப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு பெற்றோர்கள் செய்ய தவறினால், பால் ஆதார் அட்டை செல்லாது என ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது
0
0