இரண்டு வருட சம்பளம் உட்பட ஊழியர்களுக்கான நிவாரண விவரங்கள் | பஜாஜ் ஆட்டோ அறிவிப்பு

13 May 2021, 8:13 pm
Bajaj Auto announces relief measures for employees, including two years' salary
Quick Share

கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையில் சிக்கித்தவிக்கும் நாடு முழுவதும் உள்ள தனது ஊழியர்களுக்கும் சமூகங்களுக்கும் உதவுவதற்காக நிவாரண உதவிகளை வழங்குவதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தனது ஊழியர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகத்திற்கு சேவை செய்வதற்காக அதன் அனைத்து ஆலைகளிலும் 250 க்கும் மேற்பட்ட படுக்கைகளை அமைத்துள்ளதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. கோவிட்-19 காரணமாக தங்களின் கணவன்/மனைவியை இழந்திருந்தால் அந்த ஊழியரின் குடும்பத்திற்கு இரண்டு வருட சம்பளத்தை நிவாரணமாக வழங்குவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

கோவிட்-19 இன் இரண்டாவது அலை நாட்டிற்கும் குடிமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்த காலகட்டத்தில், பல வாகன நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கும் மக்களுக்கும் நிவாரணங்கள் மூலம் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, பஜாஜ் ஆட்டோ 12 ஆக்ஸிஜன் ஆலைகள் மற்றும் பல சுவாச கருவிகளை கொள்முதல் செய்வது உட்பட பல்வேறு அரசு, உள்ளூர் நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மொத்தம் 300 கோடி ரூபாயை நிவாரண உதவியாக வழங்கியுள்ளது.

தனது ஊழியர்கள் மீது அக்கறையுடன் இருப்பதாக தெரிவித்துள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கோவிட்-19 தொற்று காரணமாக ஊழியர்கள் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கான ஐந்து வருட மருத்துவ காப்பீட்டு தொகையைப் பெற்று தருவதாகவும், ஊழியரின் குழந்தைகளுக்கு கல்வி செலவுகளை ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளது. 

Views: - 280

0

0