புத்தம் புதிய பஜாஜ் பிளாட்டினா 100 எலக்ட்ரிக் ஸ்டார்ட் பைக் அறிமுகம்! இதன் விலை எவ்வளவு தெரியுமா?
2 March 2021, 2:33 pmபஜாஜ் ஆட்டோ செவ்வாயன்று புதுப்பிக்கப்பட்ட பிளாட்டினா 100 எலக்ட்ரிக் ஸ்டார்ட் (ES) பைக்கை ரூ.53,920 (டெல்லி, எக்ஸ்ஷோரூம் விலை) விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் பிளாட்டினா பிராண்டின் நிரூபிக்கப்பட்ட ‘கம்ஃபோர்டெக் தொழில்நுட்பத்துடன்’ (Comfortec technology) வருகிறது.
புதிய பிளாட்டினாவில் ஸ்பிரிங்-இன்-ஸ்பிரிங் சஸ்பென்ஷன் இடம்பெற்றுள்ளது, இது நீண்ட பயணங்களின் போது நல்லவொரு சௌகரியத்தை அளிப்பதாக கூறப்படுகிறது. பாதுகாப்பான மற்றும் சிக்கல் இல்லாத சவாரி அனுபவத்திற்காக டியூப்லெஸ் டயர்கள் உடன் இந்த பைக் இயங்குகிறது.
இது 102 சிசி, நான்கு ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர், SOHC, ஏர்-கூல்டு இன்ஜின் உடன் இயங்குகிறது, இது 7,500 rpm இல் 7.9 PS அதிகபட்ச சக்தியையும், 5,500 rpm இல் 8.34 Nm பீக் டார்க்கையும் வழங்குகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பத்தில் நான்கு வேக மேனுவல் யூனிட் உள்ளது.
வெளிப்புற தோற்றத்தில், இந்த பைக் சிறந்த தோரணைக்காக புதிய ரியர்வியூ கண்ணாடியைப் பெறுகிறது. இது காக்டெய்ல் ஒயின் ரெட் மற்றும் எபோனி பிளாக் வித் சில்வர் டெக்கல்ஸ் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஆட்டோ டீலர்ஷிப்களிலும் கிடைக்கிறது.
0
0