பஜாஜ் டோமினார் 250 மற்றும் டோமினார் 400 பைக்குகளின் விலைகள் எகிறியது! 2 லட்சத்தையும் தாண்டியது!

8 April 2021, 5:56 pm
Bajaj Dominar 250 and Dominar 400 get a price hike
Quick Share

இரு சக்கர வாகன பிராண்டுகள் இந்திய சந்தையில் தங்கள் தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தி வருகின்றன. இந்த பட்டியலில் பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் உள்ளது. 

புனேவை தளமாகக் கொண்ட இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ இந்தியாவில் டோமினார் 400 மற்றும் டோமினார் 250 ஆகியவற்றின் விலைகளை அதிகரித்துள்ளது, மேலும் இந்த வரம்பு இப்போது ஆரம்ப விலையாக ரூ.1,70,720 முதல் கிடைக்கிறது. சமீபத்திய விலை அதிகரிப்புடன், பஜாஜ் டோமினார் 400 ரூ.2 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலை வரம்பைத் தாண்டியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட விலைகளின் பட்டியல் இதோ:

  • டோமினார் 250: ரூ.1,70,720 (முன்னதாக ரூ.1,67,718)
  • டோமினார் 400: ரூ.2,02,755 (முன்னதாக ரூ.1,99,755)

இந்த விலை உயர்வு டோமினார் தொடரில் எந்தவொரு ஸ்டைலிங் மாற்றங்களையோ அல்லது அம்சங்களின் புதுப்பிப்புகளையோ கொண்டு வரவில்லை. இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒவ்வொன்றும் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றன. 

டோமினார் 250 கேன்யான் ரெட் மற்றும் சார்கோல் பிளாக் பெயிண்ட் விருப்பங்களில் கிடைக்கிறது, டோமினார் 400 சவன்னா கிரீன் மற்றும் சார்கோல் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. 

டோமினார் மாடல் பைக்குகள் ஹோண்டா CB350RS, ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350, மற்றும் பெனெல்லி இம்பீரியல் 400 போன்றவற்றை எதிர்த்து போட்டியிடுகிறது.

பஜாஜ் தவிர, கே.டி.எம் மற்றும் ஹஸ்குவர்ணா தயாரிப்புகளின் விலைகளும் இந்த மாதத்தில் அதிகரித்துள்ளன. கேடிஎம் வரம்பு இப்போது ரூ.1,59,488 முதல் கிடைக்கிறது, அதே நேரத்தில் ஹஸ்குவர்ணா மோட்டார் சைக்கிள்களுக்கான விலை ரூ.1,98,093 முதல் தொடங்குகின்றன.

குறிப்பு: அனைத்து விலைகளும் எக்ஸ்ஷோரூம், டெல்லி

Views: - 3

0

0

Leave a Reply