வெயிட் பண்ண எல்லா PUBG ரசிகர்களுக்கும் வெயிட்டான அப்டேட் வந்தாச்சு!

14 May 2021, 7:47 pm
Battlegrounds Mobile India pre-registrations start May 18 on Google Play Store
Quick Share

தென் கொரிய வீடியோ கேம் டெவலப்பரான கிராஃப்டன், BATTLEGROUNDS MOBILE INDIA கேமுக்கான முன் பதிவுகள் தொடங்கும் தேதியை இன்று அறிவித்துள்ளது. வெளியான அறிவிப்பின்படி, இந்த கேமுக்கான முன் பதிவுகள் மே 18 முதல் தொடங்கும்.

முன்கூட்டியே பதிவு செய்யும் ரசிகர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட வெகுமதிகள் கிடைக்கும். இந்த வெகுமதிகள் இந்திய வீரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதும் கூடுதல் சிறப்பான தகவல்.

BATLLEGROUNDS MOBILE INDIA க்கு முன்பே பதிவு செய்ய, Google Play Store க்குச் சென்று “Pre Register” விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்துக்கொள்ளலாம். மேலும் இந்த கேம் வெளியாகும் நேரத்தில் உங்களுக்கான வெகுமதிகளை claim செய்து கொள்ளமுடியும்.

BATTLEGROUNDS MOBILE INDIA இந்தியாவில் மட்டுமே விளையாட பிரத்தியேகமாக கிடைக்கும்.

BATTLEGROUNDS MOBILE INDIA என்பது இந்தியாவுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட PUBG மொபைலின் புதிய மாறுபாடு ஆகும். விளையாட்டு அதன் சொந்த ஸ்போர்ட்ஸ் சுற்றுச்சூழல் அமைப்புடன் வரும், அதில் போட்டிகள் மற்றும் லீக்குகள் போன்ற அம்சங்கள் இருக்கும்.

BATTLEGROUNDS MOBILE INDIA முன்னதாக PUBG மொபைல் இந்தியா என அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கிராஃப்டன் நிறுவனம் இந்திய வெளியீட்டுக்காக PUBG  என்ற பெயரை நீக்கியுள்ளது. 

Views: - 204

0

0