இந்தியர்களை முட்டாளாக்கியதா கிராஃப்டன் நிறுவனம்? IGN India வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Battlegrounds Mobile India

23 June 2021, 8:30 am
Battlegrounds Mobile India’s data sharing issue with Chinese servers
Quick Share

PUBG கேமின் மறுபெயரிடப்பட்ட பதிப்பான Battlegrounds Mobile India கடந்த வாரம் Early Access பதிப்பாக சில பயனர்களுக்கு வெளியானது. இதையடுத்து இந்த கேம் இந்தியாவில் விரைவில் அனைத்து பயனர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் மிகப்பெரிய சிக்கலில் சிக்கியுள்ளது. 

இதற்கு முன்னர் கடந்த 2020 ஆண்டு செப்டம்பர் மாதம் PUBG மொபைல் கேம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணம், இந்த கேம் இந்திய பயனர்களின் தரவை சீன சேவையகங்களுக்கு அனுப்புகிறது என்பதுதான். அதுமட்டுமில்லாமல் சீன நிறுவனமான Tencent உடன் Krafton நிறுவனத்துக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

அதையடுத்து கிராஃப்டன் நிறுவனம் Tencent உடன் தனது ஒப்பந்தத்தை நிறுத்துவதாகவும், சீனாவில் உள்ள சேவையகங்களுக்கு இந்தியர்களின் தரவுகள் அனுப்பப்படாது என்றும் உறுதியளித்தது. இந்தியா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் உள்ள சேவையகங்களில் மட்டுமே தரவுகள் சேவையகங்களில் சேமிக்கப்படும் என்றும் உறுதியளித்தது. இவ்வாறு இந்திய அரசு விதித்த விதிமுறைகளுக்கெல்லாம் இணங்குவதற்கு சரி சரி என்று தலையசைத்து விட்டு மீண்டும் அதே தவறை கிராஃப்டன் நிறுவனம் இப்போது செய்து கையும் களவுமாக சிக்கியுள்ளது.

Battlegrounds Mobile India’s data sharing issue with Chinese servers

இப்போது IGN இந்தியா தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, Battlegrounds Mobile India கேமின் தரவுகள் சீன சேவையகங்களுக்கு அனுப்பப்பட்டு பெறப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஹாங்காங், மாஸ்கோ மற்றும் அமெரிக்காவில் உள்ள சேவையகங்களுக்கும் இந்த தரவுகள் பகிரப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. 

அதுமட்டுமில்லாமல் Tencent உடன் உறவே இல்லை என்று கூறிய நிலையில், இந்த Battlegrounds Mobile India கேம் boot up ஆகும்போது பெய்ஜிங்கில் உள்ள டென்சென்ட் நிறுவனத்தின் சேவையகத்துடன் தொடர்புக்கொள்வதும் கண்டறியப்பட்டுள்ளது. 

இதை கண்டறிந்து IGN இந்தியா தெரிவித்ததை அடுத்து கிராஃப்டன் நிறுவனம் செய்து தில்லு முல்லு வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. இதையடுத்து, இந்த சீன சேவையகம் பிரச்சினையைப் போக்க கிராஃப்டன் நிறுவனம் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டை டவுன்லோடு செய்த பிறகு Restart செய்து மீண்டும் Log in செய்தால் எந்த பிரச்சினையும் இருக்காது என்று தெரிவித்துள்ளது. 

Battlegrounds Mobile India என்ற புதிய பெயரில் PUBG மொபைல் கேம் இந்தியாவில் நுழைந்திருந்தாலும் இப்போது அதன் நம்பகத்தன்மையை  இழந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் PUBG மொபைல் கேமில் இருந்து Battlegrounds Mobile India வுக்கு டேட்டாவை டிரான்ஸ்ஃபர் செய்த பயனர்களின் தரவுகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பது குறித்த தகவல் எதையும் krafton நிறுவனம் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 156

1

0