BenQ 4K லேசர் டிவி V6000/V6050 இந்தியாவில் அறிமுகம் | அம்சங்கள் & விலை விவரங்கள் இங்கே

Author: Hemalatha Ramkumar
19 August 2021, 12:05 pm
BenQ 4K Laser TV V6000/V6050 launched in India
Quick Share

BenQ தனது V6000 மற்றும் V6050 அல்ட்ரா-ஷார்ட் த்ரோ 4K லேசர் டிவியை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. 

இந்த டிவி லேசர் ப்ரொஜெக்ஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பத்தின் உதவு உடன் ஒரு பெரிய சுவர் அல்லது ALR திரையில் ட்ரூ 4K படத் தரத்தைப் பெற முடியும். 

BenQ V6000/V6050 மூலம் எந்தவொரு மேற்பரப்பிலும் 120 இன்ச் டிஸ்ப்ளே வரை ப்ரொஜெக்ஷன் செய்ய முடியும். 

புதிய லேசர் டிவியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.

BenQ V6000/V6050: விவரக்குறிப்புகள், அம்சங்கள்

  • BenQ V6000/V6050 4K லேசர் டிவி 3000 லுமன்ஸ் பிரகாசம் மற்றும் 4K அல்ட்ரா ஷார்ட் த்ரோ லேசர் ப்ரொஜெக்டர் உடன் 98% DCI-P3 கலர் ஸ்பேஸ் கவரேஜுடன் வருகிறது. 
  • இதன் திரை HDR-PRO பட தரத்தை வழங்கும் திறன் கொண்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 
  • இதனுடன் 23-இன்ச் அளவில் இருந்து 100 இன்ச் வரை ப்ரொஜெக்ட் செய்ய முடியும் மற்றும் குறுக்குவாக்கில் ப்ரொஜெக்டர் டிஸ்பிளே வரம்பு 70-120 இன்ச் வரையிலானது ஆகும்.
  • இது உயர்தர TreVolo ஸ்பீக்கர்கள், கண் பாதுகாப்பிற்கான மோஷன் சென்சார் மற்றும் தானியங்கி சன்ரூஃப் ஸ்லைடர் ஆகியவற்றுடன் பொருத்தப்பட்டுள்ளது. 
  • இது ப்ரொஜெக்டர் பயன்பாட்டில் இல்லாதபோது தானே மூடிக்கொண்டு, தேவையற்ற தூசி சேர்வதைத் தடுக்கிறது. நிறுவனம் 30,000 மணிநேரம் வரை லைட் சோர்ஸ் லைஃப்க்கு உத்தரவாதம் அளிக்கிறது.
  • BenQ லேசர் டிவி 3D வியூ அம்சத்தையும் ஆதரிக்கிறது. அதோடு, ஆப்டிகல் அவுட்/HDMI (eARC) உடன் வெளிப்புற ஸ்பீக்கர்களுக்கான இணைப்பு விருப்பங்கள், இரண்டு HDMI போர்ட்கள், மூன்று USB ரீடர் போர்ட்கள் மற்றும் ஒரு ஆப்டிகல் அவுட் RS232 போர்ட் ஆகியவையும் உள்ளது.

விலை விவரங்கள்

  • வாழ்க்கை அறை பொழுதுபோக்கை இலக்காக கொண்ட, BenQ V6000/6050 லேசர் டிவி 100/120 அங்குல ALR (சுற்றுப்புற ஒளி நிராகரிப்பு திரை, இது பிரதிபலிப்புகளைத் தடுக்கிறது மற்றும் லேசர் டிவியை அறையில் விளக்குடன் பயன்படுத்த அனுமதிக்கிறது) திரையுடன் வருகிறது  மற்றும் ஒரு தொகுக்கப்பட்ட 32 ஜிபி ஆப்பிள் டிவி சாதனத்துடன் ரூ.4,99,000 விலையில் கிடைக்கிறது. 
  • இந்த டிவி நிறுவல் ஆதரவுடன் வருகிறது, ப்ரொஜெக்டரில் 3 வருட ஆன்சைட் வாரண்டி மற்றும் ஒளி மூலத்தில் 3 ஆண்டுகள் அல்லது 15,000 மணிநேரம் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. லேசர் டிவி இந்தியாவில் சாம்சங் பிரீமியர் போன்ற தயாரிப்புகளுடன் போட்டியிடும்.

Views: - 410

0

0