ஏப்ரலில் இந்தியாவில் அதிகம் விற்பனையான எஸ்யூவிகள் இவைதான் ! மாருதியை மிஞ்சும் ஹூண்டாய்

4 May 2021, 5:32 pm
Best-selling SUVs in India in April
Quick Share

ஹேட்ச்பேக் கார்களை பொறுத்தவரை மாருதி நிறுவனம் தான் ராஜாவாக இருந்து வருகிறது. ஆனால் எஸ்யூவிகளை பொறுத்தவரை ஹூண்டாய் மிகவும் பிரபலமான பிராண்டாக வளர்ந்து வருகிறது. 

இப்போது இரண்டு ஹூண்டாய் எஸ்யூவிகள் மக்கள் அதிகம் விரும்பும் எஸ்யூவிகளாக மாறியுள்ளன. ஏப்ரல் மாதத்தின் விற்பனை புள்ளிவிவரங்கள் வெளியான பின்னர் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ஹூண்டாய் வென்யூ எஸ்யூவிகள் நடுத்தர மற்றும் சப்-காம்பாக்ட் எஸ்யூவி பிரிவுகளில் முன்னணியில் இருந்தது தெரிய வந்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் கொரிய கார் தயாரிப்பாளர்களின் மிகவும் பிரபலமான வாகனமாக விளங்கும் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி, கடந்த மாதம் விற்பனையில் சிறிது சரிவைக் கண்டது. தற்போதைய கோவிட்-19 நெருக்கடி இருந்தபோதிலும், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்கப்பட்ட 12,640 யூனிட்களுடன் ஒப்பிடும்போது, ஹூண்டாய் ஏப்ரல் மாதத்தில் 12,463 யூனிட் கிரெட்டா எஸ்யூவியை விற்க முடிந்துள்ளது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, கோவிட் -19 தொற்றுநோயால் இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்பு, ஹூண்டாய் 1.21 லட்சத்துக்கும் அதிகமான கிரெட்டா எஸ்யூவிகளை விற்க முடிந்தது. 

சமீபத்தில் ஹூண்டாய் அதன் விலையை அதிகரித்த போதிலும் கிரெட்டா எஸ்யூவிக்கு நல்ல ஓட்டமே தொடர்கிறது. சமீபத்திய விலை உயர்வின்போது, ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியின் விலையை பெரும்பாலான வகைகளில் அதிகரித்துள்ளது. கிரெட்டா எஸ்யூவி விலைகள் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2021 ஆம் ஆண்டிலேயே இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை கிரெட்டா எஸ்யூவி மூன்று பவர் ட்ரெய்ன் விருப்பங்களுடன் வழங்கப்படுகிறது, இதில் 1.5 லிட்டர் MPi பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் U2 CDRi டீசல் இன்ஜின் மற்றும் 1.4 லிட்டர் கப்பா டர்போ GT பெட்ரோல் இன்ஜின் ஆகியவை அடங்கும்.

ஹூண்டாய் கடந்த மாதம் வென்யூ எஸ்யூவியின் 11,245 யூனிட்டுகளை விற்பனை செய்தது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்ற 10,722 யூனிட்டுகளை விட சற்று அதிகம் ஆகும். சப்-காம்பாக்ட் எஸ்யூவி அதன் போட்டியாளரான மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸாவின் விற்பனை புள்ளிவிவரங்களை வெறும் 25 யூனிட்டுகளை கூடுதலாக விற்பனைகிச் செய்து முந்தியுள்ளது. ப்ரெஸ்ஸா இந்த பிரிவில் சில காலமாக முதல் தேர்வாக உள்ளது, ஆனால் வென்யூ எஸ்யூவி இப்போது நல்ல வரவேற்பை பெற்று வருவதாக தெரிகிறது.

Views: - 60

0

0

Leave a Reply