அமேசானில் ரூ.5000 முதல் ரூ.15,000 க்குள் வாங்க சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்

16 October 2020, 8:49 pm
best smartphones under Rs 15,000 during Amazon Great Indian Festival.
Quick Share

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கும். பிரைம் பயனர்களுக்கு, விற்பனை அக்டோபர் 16 ஆம் தேதி ஒரு நாள் முன்னதாகவே தொடங்கும். பண்டிகை காலத்தை முன்னிட்டு இ-காமர்ஸ் தளம் ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகைகள் பட்ஜெட், இடைப்பட்ட மற்றும் பிரீமியம் சாதனங்களிலலும் கிடைக்கின்றன.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது ரூ.15,000 க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி M01 கோர் – ரூ .4,999

சாம்சங் கேலக்ஸி M01 கோர் இந்தியாவில் ரூ.5999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொலைபேசி இரண்டு மெமரி வகைகளில் வருகிறது – 16 ஜிபி மற்றும் 32 ஜிபி முறையே ரூ.5499 மற்றும் ரூ.6499.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல், இந்த தொலைபேசியின் 16 ஜிபி சேமிப்பக மாடலை ரூ.4,999 விலையிலும், 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடலை ரூ.5,999 விலையிலும் விற்பனை செய்யும்.

ரெட்மி 8A டூயல் – ரூ.7,299

ரெட்மி 8A டூயல் 2 ஜிபி ரேம் 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ.7,299 (முன்பு ரூ.7,499) விலையுடனும், 3 ஜிபி ரேம் 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ.8,299 விலையுடனும், 3 ஜிபி ரேம் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ.8,999 விலையுடனும் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி M01s – ரூ.9,499

சாம்சங் கேலக்ஸி M01s போனின் ஒற்றை 3 ஜிபி ரேம் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.9999 விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அமேசான் விற்பனையில், ரூ.500 தள்ளுபடிக்கு பிறகு இந்த தொலைபேசி ரூ.9,499 விலையில் கிடைக்கும்.

ரெட்மி நோட் 9 ப்ரோ – ரூ.12,999

ரெட்மி நோட் 9 ப்ரோ ரூ.12,999 ஆரம்ப விலையில் கிடைக்கும். ரெட்மி நோட் 9 ப்ரோ முன்பு 4 ஜிபி 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ.13,999 விலையும், 4 ஜிபி 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.15,999 விலையும், 6 ஜிபி 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ.16,999 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற வகைகளின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை.

ரெட்மி நோட் 8 – ரூ .11,499

ரெட்மி நோட் 8 தற்போது 4 ஜிபி ரேம் 64 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக ரூ.12,499 விலையிலும். 6 ஜிபி 128 ஜிபி சேமிப்பு விருப்பம் தற்போது ரூ.14,499 விலையிலும் விற்கப்படுகிறது. அமேசான் விற்பனையில், தொலைபேசி விலை ரூ.11,499 முதல் தொடங்கும்.

Leave a Reply