வெறித்தனமான கேமர்களுக்காகவே BoAt Immortal 1000D கேமிங் ஹெட்ஃபோன்ஸ் இந்தியாவில் அறிமுகம் | விலையோ ரொம்ப கம்மி!

14 July 2021, 10:41 am
BoAt Immortal 1000D gaming headphones launched in India
Quick Share

BoAt நிறுவனம் கேமிங் ஹெட்ஃபோன்களின் வரிசையில் “Immortal 1000D” என்ற புதிய ஹெட்போனை அறிமுகம் செய்து உள்ளது. BoAt Immortal 1000D என அழைக்கப்படும் முதன்மை மாடல் ஹெட்போன், பிரீமியம் கேமிங் மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்திற்காக டால்பி அட்மோஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. ஹெட்ஃபோன்கள் 50 மிமீ டிரைவர்களுடன் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்கக்கூடிய ஒரு தயாரிப்பாக வெளியாகியுள்ளன.

BoAt Immortal 1000D 2 வண்ணங்களில் கிடைக்கிறது. கேமிங் ஹெட்ஃபோன்கள் அமேசான் மற்றும் BoAt இணையதளத்தில் இந்த ஹெட்போன் ரூ.2499 விலையில் விற்பனைச் செய்யப்படுகிறது. ஆனால் இதன் அசல் விலை ரூ.5,990 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

BoAt Immortal 1000D விவரக்குறிப்புகள், அம்சங்கள்

டால்பி அட்மோஸ் ஆதரவுடன் இந்த ஹெட்போன் மூலம் ஒலியைக் கேட்பவருக்கு முப்பரிமாண துல்லியத்துடன் கேட்கும் அனுபவம் கிடைக்கும் என்று BoAt தெரிவித்துள்ளது. இதன் மூலம், கேமர்கள் வேகமாகவும் துல்லியமாகவும் செயல்பட முடியும். கூடுதலாக, இது அணி வீரர்கள் மற்றும் எதிரிகளின் நிலை மற்றும் இயக்கத்தை சுட்டிக்காட்டும் வகையிலும் ஒலியை வழங்கும் திறன் கொண்டது.

இந்த ஹெட்ஃபோன்கள் boat பிராண்டின் சொந்த boAt Plugin labz மூலம் உருவாக்கப்பட்ட 7.1 சேனல் சரவுண்ட் ஆடியோவையும் கொண்டுள்ளது. கேம் விளையாடும் போது பயனர்கள் 7.1 சேனல் சரவுண்ட் ஆடியோ அல்லது டால்பி அட்மோஸ் ஆகியவற்றுக்கு இடையில் தங்களுக்கு விருப்பமான ஒன்று மாறிக்கொள்ளலாம்.

boAt Immortal 1000D, கேம் விளையாடும் போது மேம்படுத்தப்பட்ட தகவல்தொடர்புக்கென இரட்டை மைக்குகளுடன் வருகிறது. யூடியூப், டிஸ்கார்ட், ட்விச் மற்றும் பிற ஸ்ட்ரீமிங் இயங்குதளங்களில் தடையற்ற குரல் மற்றும் வீடியோ உரையாடல்களுக்கான ஆடியோ, மைக் மற்றும் LED ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ரிமோட்டையும் கொண்டுள்ளது.

இதன் யூ.எஸ்.பி கேபிள் அனைத்து லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கேமிங் அமைப்புகளிலும் எளிதான இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தனை அம்சங்களுடன் இது சிற்பபான தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Views: - 201

0

0