வாட்ஸ்அப்பில் உங்களை யாரவது எரிச்சலூட்டுகிறார்களா? அவர்களை போட்டுக்கொடுப்பது எப்படி?
27 September 2020, 8:41 pmவாட்ஸ்அப் பயன்படுத்தும் பலர் சில நேரங்களில் ஏதேனும் ஒருவரிடமிருந்து மெசேஜ்களை பெறுவதால் எரிச்சல் அடைய நேரிடலாம். அது போன்ற பயனர்களுக்கு, தேவையற்ற மெசேஜ்களை உடனடியாகத் தடுக்க ஒரு செம்ம டிப்ஸ் இருக்குங்க. ஒரு பயனர் வாட்ஸ்அப் தளத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் நடந்திருந்தால் அவர்களின் வாட்ஸ்அப் கணக்கையே கூட சஸ்பெண்ட் செய்ய முடியும். சரி, அதை எப்படி செய்யணும்னு தானே கேக்குறீங்க. அதை பற்றி தாங்க இந்த பதிவுல பார்க்கப்போகிறோம்.
வாட்ஸ்அப்பில் சிக்கல்களை புகாரளிப்பது எப்படி?
வாட்ஸ்அப் செயலி மூலம் வாட்ஸ்அப் நிர்வாகத்தை தொடர்புகொள்வதன் மூலம் வாட்ஸ்அப் செயலியில் உங்களுக்கு இருக்கும் சிக்கல்கள் குறித்து புகாரளிக்கலாம்.
அதற்கு வாட்ஸ்அப் செயலியைத் திறந்து More Options விருப்பத்தை தேர்வு செய்து Settings என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அடுத்து Help என்பதை தேர்வு செய்து Contact Us எனும் விருப்பத்தை தேர்வு செய்யவேண்டும்.
இப்போது, உங்கள் Email ID யை முதலில் உள்ளிட வேண்டும். அதை உறுதி செய்ய மீண்டும் மின்னஞ்சலை உள்ளிட வேண்டும். இப்போது உங்கள் புகாரைத் தெரிவித்து, உங்களுக்கு பிரச்சினையாக இருக்கும் நபருடனான Chatஐ Screen Shot எடுத்து அனுப்ப வேண்டும்.
நீங்கள் அனுப்பிய புகாரை வாட்ஸ்அப் நிர்வாகம் Verify செய்துவிட்டு, அதற்கேற்ற உரிய நடவடிக்கையை எடுக்கும்.