Bosch | இந்தியாவின் மிகப்பெரிய மல்டி பிராண்ட் கார் சேவை மையம் திறப்பு!
19 January 2021, 3:39 pmபோஷ் இந்தியாவின் மிகப்பெரிய மல்டி பிராண்ட் கார் சேவை மையத்தை ஹரியானாவின் பஞ்ச்குலா பகுதியில் திறந்துள்ளது. புதிய வசதி நாட்டில் பிராண்டின் வொர்க்ஷாப் செயின் நெட்வொர்க் விரிவாக்க இயக்கத்தின் ஒரு பகுதியாகும். தற்போது, இந்த பிராண்ட் இந்தியா முழுவதும் 250 க்கும் மேற்பட்ட சேவை மையங்களைக் கொண்டுள்ளது.
நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்த பட்டறை (Workshop) மூலோபாய ரீதியாக பஞ்ச்குலாவின் வாகன மையத்தில் அமைந்துள்ளது. இது பல கார் டீலர்ஷிப் பட்டறைகளுக்கு அருகிலேயே உள்ளது. போஷ் கார் சேவை நிலையம் அருகிலுள்ள நகரங்களான சண்டிகர் மற்றும் மொஹாலியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான தேவைகளைப் பூர்த்திச் செய்கிறது.
இந்த பட்டறை சுமார் 36,000 சதுர அடி பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி பிராண்டைப் பொருட்படுத்தாமல் வாகனங்களுக்கு சேவை செய்வதற்கு 40 க்கும் மேற்பட்ட இட வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த பட்டறைகள் அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் சமீபத்திய போஷ் கண்டறியும் கருவிகளைக் (Bosch diagnostic equipment) கொண்டுள்ளன. வாகன சிக்கலறிதலுக்கான ESI மென்பொருளுடன் ECU கண்டறியும் ஸ்கேனர் (ECU diagnostic scanner) இதில் அடங்கும்.
இந்த பட்டறை 28 நபர்களுடன் ஒரு நாளில் 45 க்கும் மேற்பட்ட கார்களுக்கு சேவை செய்யும் திறன் கொண்டது. தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிக தொழில்முறை பயிற்சி பெற்றவர்கள், வாகனங்களில் எழும் பல்வேறு சிக்கல்களை சரிசெய்துக் கொடுப்பார்கள்.
பட்டறை வழங்கும் சேவைகளில் பராமரிப்பு, ECU கண்டறிதல், பிரேக் சேவை, கிளட்ச் பழுதுபார்ப்பு, சஸ்பென்ஷன் அமைப்பு, AC கண்டறிதல் மற்றும் சேவை, மொத்த பழுதுபார்ப்பு, பாடி ரிப்பேர் மற்றும் பெயின்டிங், சக்கர சமநிலை, டயர் சேவை, கார் கழுவுதல் மற்றும் கார் டீடெய்லிங் ஆகியவை அடங்கும்.
கூடுதலாக, சாலையோர உதவி, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லுதல், ஒரு பாடி ஷாப்பில் பணமில்லா காப்பீட்டு பழுதுபார்ப்பு மற்றும் காப்பீட்டை புதுப்பித்தல் மற்றும் வருடாந்திர சேவை பராமரிப்பு திட்டம் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளையும் இந்த பட்டறை வழங்குகிறது.
0
0