இந்தியாவில் விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை!

2 March 2021, 6:00 pm
BSNL Might Bring 4G Services Soon In India
Quick Share

பிஎஸ்என்எல் இந்தியாவில் பல தளங்களை மேம்படுத்தி அடுத்த ஆறு மாதங்களில் 4ஜி சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசாங்க தொலைதொடர்பு நிறுவனம் 4ஜி சேவைகளை தொடங்க 49,300 க்கும் மேற்பட்ட தளங்களை மேம்படுத்தும். 

4 ஜி சேவைகளை வெளியிடுவதில் இருக்கும்  சிக்கல்கள் 

பிஎஸ்என்எல் அதன் 4ஜி சேவைகளை தாமதப்படுத்துவதற்கு முக்கிய காரணம், உள்நாட்டு விற்பனையாளர்களை தேர்வு செய்யுமாறு TRAI வலியுறுத்தியுள்ளது தான். அதாவது எரிக்சன், நோக்கியா, ZTE மற்றும் ஹவாய் ஆகியவற்றைப் பயன்படுத்த அரசின் மூலம் இயங்கும் தொலைத் தொடர்பு நிறுவனம் அனுமதிக்கப்படவில்லை. 

அதுமட்டுமில்லாமல், தொலைதொடர்பு நிறுவனம் இந்தியாவின் IPR  அல்லது உரிமம் மற்றும் சோர்ஸ் கோட் கொண்ட ஒரு நிறுவனத்தைப் பயன்படுத்த வேண்டும். தொலைதொடர்பு நிறுவனம் இந்த விதிமுறைகளை பூர்த்தி செய்ய இயலாத சூழ்நிலையில் உள்ளதாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

வர்த்தக விவரக்குறிப்புகளுடன், சரியான 4ஜி நெட்வொர்க் மற்றும் சேவைகளை (ZTE தளங்கள் உட்பட) வழங்க அதன் தளங்களை மேம்படுத்தவும் 4ஜி டெண்டர் விடவும் நிறுவனம் திட்டமிடுவதாக அறிக்கை பரிந்துரைக்கிறது. பி.எஸ்.என்.எல் சமீபத்தில் தொலைத்தொடர்பு துறை மற்றும் பிரதமர் அலுவலகம் (PMO) முன் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளது.

சோதனைகளுக்கு அதிக நேரம் கோரும் உள்நாட்டு விற்பனையாளர்கள் 

இது தவிர, டி.சி.எஸ், ஸ்டெர்லைட், மவெனீர், HFCL, டெக் மஹிந்திரா, மற்றும் பல நிறுவனங்கள் கருத்து நிரூபணத்தை நடத்துவதற்கு ஆறு முதல் எட்டு மாதங்கள் தேவைப்படும் என்று கூறியுள்ளன. 

மேலும், தொலைதொடர்பு ஆபரேட்டர் அடுத்த 10 மாதங்களில் 4 ஜி சேவைகளை வெளியிடும் என்று தெரிவித்தது. தெரியாதவர்களுக்கு, பிஎஸ்என்எல் ஏற்கனவே நாட்டில் 4 ஜி திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த திட்டங்கள் ஏற்கனவே சில இடங்களில் கிடைக்கின்றன. இவை ரூ.96 மற்றும் ரூ.236 விலைகளில் கிடைக்கின்றன. இந்த திட்டங்கள் 28 நாட்களுக்கு 90 ஜிபி தரவையும், 84 நாட்களுக்கு 2,36 ஜிபி தரவையும் வழங்குகின்றன.

Views: - 12

0

0