ப்ரீபெய்ட் பயனர்களுக்கு பிஎஸ்என்எல் வழங்கும் இந்த சேவை இலவசம்!

6 February 2021, 9:46 am
BSNL Offering Free Call Forwarding Services To Prepaid Users
Quick Share

50 சதவிகித செட்டில்மென்ட் சலுகையை அறிமுகப்படுத்திய பின்னர், பிஎஸ்என்எல் மீண்டும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சலுகையை கொண்டு வந்துள்ளது. புதிய சலுகையின் படி, டெலிகாம் ஆபரேட்டர் 2021 பிப்ரவரி 4 முதல் சென்னையில் உள்ள GSM மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு வசதிகளை வழங்கி வருகிறது. இந்த வளர்ச்சியை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் நிறுவனம் பகிர்ந்து கொண்டுள்ளது.

நிறுவனத்தின் ட்வீட்டில் தெரிவிக்கப்பட்ட தகவலின் படி, இந்த இலவச அழைப்பு பகிர்தல் வசதி அனைத்து மொபைல் எண், லேண்ட்லைன் மற்றும் ஒரே எண்ணிலான GSM ப்ரீபெய்ட் சேவைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நிறுவனம் இந்த சேவைகளுக்கென எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை, அதாவது செயல்படுத்தும் கட்டணம் இல்லை; இருப்பினும், ப்ரீபெய்ட் பயனர்கள் அழைப்புகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.

பிஎஸ்என்எல் கால் ஃபார்வர்ட் சர்வீசஸ்: விவரங்கள்

மற்ற எண்களுக்கு ஃபார்வேர்டு செய்யப்படும் அழைப்புகள் வெளிச்செல்லும் (Outgoing) அழைப்புகளாக கருதப்படுகின்றன, மேலும் இது இலவசங்கள், சிறப்பு கட்டண வவுச்சர்கள் மற்றும் பிற கட்டண பொதிகளாக இருந்தாலும் திட்டங்களின்படி கட்டணம் வசூலிக்கப்படும் என்று தொலைதொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வரம்பற்ற இலவச குரல் திட்டம் மற்றும் வரம்பற்ற சிறப்பு கட்டண வவுச்சர்களைப் பயன்படுத்தும் பயனர்கள் சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 

அதாவது மற்ற நெட்வொர்க்குகளில் வெளிச்செல்லும் அழைப்புகளுக்கு கட்டணம் ஏதும் இருக்காது. மேலும், எந்தவொரு வாடிக்கையாளரும் 106 ஐப் பயன்படுத்துகிறார்களோ அல்லது இலவசமாக குரல் அழைப்புகள் இல்லாத எந்தவொரு பேக்கையோ பயன்படுத்தினால், அழைப்பு பகிர்தல் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தொலைத்தொடர்பு நிறுவனம் விளக்கியுள்ளது.

Views: - 0

0

0