இப்படியாச்சும் புது வாடிக்கையாளர்கள் கிடைப்பார்களா? பிஎஸ்என்எல் எடுத்த இந்த முடிவு கைகொடுக்குமா?

20 April 2021, 12:21 pm
BSNL Offering Free 4G SIM To Increase Its Users Base
Quick Share

பிஎஸ்என்எல் புதிய ப்ரீபெய்ட் பயனர்களுக்கு இலவசமாக 4ஜி SIM கார்டு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை ஏற்கனவே நடைமுறையில் தான் இருந்தது. அதையடுத்து இப்போது ஜூன் 30, 2021 வரையிலும் 4ஜி SIM இலவசமாக கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது. 

பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புதிய SIM கார்டையும் பெற முடியும். இல்லையென்றால்  தங்களிடம் ஏற்கனவே இருக்கும் வேறொரு நெட்வொர்க் வழங்குனரின் மொபைல் எண்ணை BSNL க்கு போர்ட் செய்தும் கொள்ளமுடியும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை புதிய பயனர்களை ஈர்க்கவும் 4ஜி SIM விற்பனையை அதிகரிக்கவும் உதவியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.

ஆனால், உண்மையிலேயே இந்த புதிய சலுகை கைகொடுக்குமா? 

நிறுவனம் இதற்கு முன்பும் இதே சலுகையை நீண்ட காலமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் தனது பயனர் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகரித்துள்ளது. அதனால்தான் மீண்டும் அதே சலுகையைத் தொடர்ந்து கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது. ஆனால், இன்னும் 4ஜி சேவையை நிறுவனம் தொடங்கவில்லை என்பதால், நிறுவனம்  இன்னும்  3ஜி வேகத்திலேயே அதன் சேவைகளை வழங்குகிறது. இதனால் குறைந்த விலையிலான திட்டம் காரணமாகவே பயனர்களும் புதிய SIM கார்டுகளை வாங்கி வருகின்றனர். இந்த  புதிய சலுகையினாலும், பெரிய அளவில் பயனர் தளத்தை BSNL பெறுவது கஷ்டம் தான். 

அதுமட்டுமில்லாது, இந்த சலுகை ரூ.100 விலையிலான முதல் ரீசார்ஜ் கூப்பனை (FRC) தேர்ந்தெடுக்கும் வடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். 

பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, அனைத்து பயனர்களும் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது நிறுவனத்தின் சில்லறை விற்பனையாளர் கடைகளில் 4ஜி SIM கார்டைப் பெறலாம். 

ஆனால், பயனர்கள் அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆதாரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியதும் அவசியம். குறைந்தபட்சம், அவர்களிடம் ஆதார் கார்டு இருக்க வேண்டியது அவசியம். 

தொலைதொடர்பு ஆபரேட்டர் அனைத்து பயனர்களுக்கும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 செய்திகளை அதன் ப்ரீபெய்டு திட்டங்களுடன் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது. தொலைதொடர்பு ஆபரேட்டர் சமீபத்தில் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களிலிருந்து FUP வரம்பை நீக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 107

0

0