ரூ.20,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது எல்ஜி வெல்வெட்! ஆனால் இந்த போனை வாங்கலாமா?

5 May 2021, 1:11 pm
Buy LG Velvet For Only Rs. 29,999 Is It Worth Buying
Quick Share

கடந்த 2020 ஆண்டு அக்டோபரில் எல்ஜி விங் ஸ்மார்ட்போனுடன் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது டூயல்-ஸ்கிரீன் வசதியுடன் கிடைக்கிறது மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், டிரிபிள் கேமரா என பல அம்சங்களோடு வருகிறது. இந்த எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் ஒரே ஒரு 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ.49,900 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இப்போது, ​​நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை அமேசான் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் தளங்களில் ரூ.20000 தள்ளுபடியுடன் ரூ.29,999 விலையில் வாங்க முடியும். இருப்பினும், இரு தளங்களும் டூயல்-ஸ்கிரீன் இருக்கிறதா இல்லையா என்பதை வெளிப்படுத்தவில்லை. ஏனெனில் இரண்டாம் திரை சேர்க்கப்படாவிட்டால், எல்ஜி வெல்வெட் போனின் விலை ரூ.36,990 தான். தவிர, No Cost EMI விருப்பம், பரிமாற்ற சலுகைகள் உட்பட பல கேஷ்பேக் சலுகைகளும் இதில் கிடைக்கும்.

எல்ஜி வெல்வெட் அம்சங்கள்

இந்த சாதனம் 6.8 அங்குல முழு HD+ (1080 x 2460 பிக்சல்கள்) POLED டிஸ்ப்ளே 20.5: 9 விகிதத்துடன் உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது மைக்ரோ SD கார்டு வழியாக 2 TB வரை விரிவாக்கக்கூடியது.

புகைப்படம் எடுப்பதற்கென மூன்று கேமரா அமைப்பு உள்ளது, இதில் 48 MP (f/1.8) முதன்மை கேமரா, 120 டிகிரி வியூ உடன் 8 MP அகல-கோண லென்ஸ் மற்றும் 5 MP ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும். 

தவிர, இது 16MP செல்ஃபி கேமரா மற்றும் 4,300 mAh பேட்டரி யூனிட்டை வேகமான வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வழங்குகிறது. இந்த தொலைபேசி தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 மதிப்பீட்டையும் மற்றும் எல்ஜியின் 3D சவுண்ட் இன்ஜினுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.

எல்ஜி நிறுவனம் மொபைல் வணிகத்தை நிறுத்திவிட்டதே  இந்த போனை வாங்கலாமா?

விலைக் குறைப்பைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், எல்ஜி வெல்வெட் பல ஆற்றல் நிரம்பிய அம்சங்களுடன் சிறந்த ஸ்மார்ட்போனாக இருக்கும். இடைப்பட்ட தொலைபேசியின் விலையில், HD டிஸ்பிளே, 48 MP பிரதான லென்ஸ், அதிகாரப்பூர்வ IP மதிப்பீடு போன்ற அம்சங்களும் கிடைக்கும்.

எல்ஜி ஸ்மார்ட்போன் வணிகத்தை நிறுத்தியதும் நாம் அறிந்த ஒன்றுதான். எல்ஜி தொலைபேசியை வாங்கலாமா வேண்டாமா என்று நம்மில் பலருக்கு கேள்வி இருக்கலாம். தற்போது விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போனுக்கான OS புதுப்பிப்புகளை வழங்கும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதால், நீங்கள் தைரியமாக எல்ஜி தொலைபேசியை வாங்கலாம். அதோடு, எல்ஜி விங், வெல்வெட் மற்றும் பல ஸ்மார்ட்போன்களும் விரைவில் மென்பொருள் புதுப்பிப்பைப் பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 347

0

0