உலகின் மிகப்பெரிய அதிபிரகாசமான டார்ச்லைட்! மிரட்டலான கின்னஸ் சாதனைப் படைத்த யூடியூபர்

Author: Dhivagar
24 July 2021, 8:52 am
Canadian inventor Hacksmith creates the world’s brightest flashlight
Quick Share

“ஹேக்ஸ்மித்” என்று பிரபலமாக அறியப்படும் கனடிய யூடியூபர் ஆன James Hobson உலகின் மிகப்பெரிய அதிபிரகாசமான டார்ச்லைட் ஒன்றை உருவாக்கி பிரமிக்க வைக்கும் உலக சாதனையைப் படைத்துள்ளார்.

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உருவாக்கங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஹேக்ஸ்மித் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனர் ஜேம்ஸ் ஹாப்சன், “நைட்பிரைட் 300” (Nitebrite 300) என்ற அதிபிரகாசமான ஃபிளாஷ்லைட்டை உருவாக்கியுள்ளார். இந்த Nitebrite 300 LED  பல்புகளை கொண்டு 501,031 லுமன்ஸ் அளவில் பிரகாசிக்கும்.

இப்போது வரை வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய அதிபிரகாசமாக ஒளிரும் விளக்கு என்றால் இமலண்ட் MS 18 மட்டும் தான்.

ஹேக்ஸ்மித் குழு முதலில் கணினிகளில் இந்த திட்டத்தை உருவாக்கி, அதன் பிறகு கைகளால் செய்து முடித்தது. 50 போர்டுகளிலும் 6 LEDகளை பொருத்தி அவற்றை ஒரு reflow oven இல் வைத்தனர். இதிலுள்ள 50 போர்டுகள் டிரைவர்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளன, இவை அனைத்தும் ஒரு பேட்டரியால் இயக்கப்படுகின்றன.

ஹேக்ஸ்மித் குழு ஒரு க்ரூக்ஸ் ரேடியோமீட்டரைப் பயன்படுத்தி இந்த ஃபிளாஷ்லைட்டின் ஒளி அலைகளின் சக்தியை அளவிடவும் செய்தது.

அப்படி அளவிடும் போது, நைட்பிரைட் 300 இலிருந்து வெளியான ஒளி க்ரூக்ஸ் ரேடியோமீட்டரை வெடித்து சிதறச்செய்யும் அளவுக்கு மிகவும் மிகவும் தீவிரமாக இருந்தது. 

சூரிய ஒளியை வைத்து காகிதங்களை எரியூட்டும் நேரத்தை விட இந்த நைட்பிரைட் 300 இல் இருந்து வெளியாகும் ஒளி மிகக்குறைந்த நேரத்தையே எடுத்துக்கொள்ளுமாம்.

ஒரு முழு கால்பந்து மைதானத்தையும் கூட ஒளிரச் செய்யும் திறன் கொண்டது உலக சாதனைப் படைத்த இந்த நைட்பிரைட் 300.

Views: - 184

0

0