கேசியோ G-ஷாக் GSW-H1000 ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்: விலை, அம்சங்கள் இதோ
3 April 2021, 1:55 pmWearOS உடன் கேசியோ பிராண்ட் புதிய G-ஷாக் GSW-H1000 எனும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது.
கேசியோ ஒரு G-ஸ்குவாட் புரோ GSW-H1000 ஸ்மார்ட்வாட்சை கூகிள் Wear OS உடன் அறிமுகம் செய்துள்ளது. GSW-H1000 அதற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகையான Google ஆப்ஸ் மற்றும் சேவைகளைக் கொண்டுள்ளது. பயனர்கள் பயணத்தின்போது கூகிள் அசிஸ்டன்ட் உதவியைப் பெறலாம் மற்றும் கூகிள் ஃபிட் மூலம் முக்கியமான செயல்பாட்டு அளவீடுகளையும் கண்காணிக்கலாம்.
அவர்கள் Google Play இல் கிடைக்கக்கூடிய ஆயிரக்கணக்கான பயன்பாடுகளிலிருந்து தங்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள், அறிவிப்புகள், நிகழ்ச்சி நிரல், வானிலை முன்னறிவிப்பு மற்றும் இது போன்ற பல முக்கியமான தகவல்களையும் பெறலாம்.
“புதிய G-ஷாக் ஸ்மார்ட்வாட்ச் அதிக கடினத்தன்மையுடனும், அதிர்ச்சி எதிர்ப்புடனும் மற்றும் 200 மீட்டர் வரை நீர் எதிர்ப்பையும் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. கூகிள் Wear OS உடன் இயங்கும் முதல் G-ஷாக் ஸ்மார்ட்வாட்ச் இதுவாகும்” என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது .
பல்வேறு உடற்பயிற்சி முறைகளையும் கொண்டுள்ளது. GSW-H1000 இன் வடிவமைப்பு சமரசமற்ற உறுதிப்பாட்டை வழங்குகிறது, இது நெகிழ்வுத்தன்மையுடன் நீடித்து உழைக்கும் நிலைத்தன்மையையும் வழங்குகிறது.
G-ஷாக்கின் முற்றிலும் தனித்துவமான, அதிர்ச்சி எதிர்ப்பு, நீர் எதிர்ப்பு போன்ற திறன்களுடன் கட்டமைக்கப்பட்ட GSW-H1000 ஒரு மைக்ரோஃபோன், சார்ஜிங் டெர்மினல் மற்றும் பல அம்சங்களையும் உள்ளடக்கியது.
1
0