சந்திர சுற்றுப்பாதையில் ஒரு வருடத்தை நிறைவு செய்தது சந்திரயான்-2!! இன்னும் 7…!

21 August 2020, 8:44 am
Chandrayaan-2, India's second lunar mission, completed one year in orbit around the moon
Quick Share

இந்தியாவின் இரண்டாவது லூனார் மிஷன் ஆன சந்திரயான்-2 வியாழக்கிழமை சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் ஒரு வருடத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. தற்போது அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன, மேலும் ஏழு ஆண்டுகளுக்கு இது செயல்பட போதுமான எரிபொருள் உடன் உள்ளது என்று விண்வெளி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-2 ஜூலை 22, 2019 அன்று ஏவப்பட்டு சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு ஆகஸ்ட் 20 அன்று சந்திரனின் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

ஆர்பிட்டர்

Chandrayaan-2, India's second lunar mission, completed one year in orbit around the moon

“மென்மையான தரையிறங்கும் முயற்சி (ரோவரைச் சுமந்த லேண்டரின்) வெற்றி பெறவில்லை என்றாலும், எட்டு அறிவியல் கருவிகளைச் சுமந்து சென்ற ஆர்பிட்டர் சந்திர சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக வைக்கப்பட்டது. இந்த ஆர்பிட்டர் தற்போதுவரை சந்திரனைச் சுற்றி 4,400 க்கும் மேற்பட்ட சுற்றுக்களை சிறப்பாக நிறைவு செய்ததோடு அதிலுள்ள கருவிகளும் தற்போது சிறப்பாக செயல்படுகின்றன,” என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

சந்திரயான்-2, நிலவியல், கனிமவியல், மேற்பரப்பு வேதியியல் கலவை, வெப்ப-இயற்பியல் பண்புகள் மற்றும் வளிமண்டலம் பற்றிய விரிவான ஆய்வின் மூலம் சந்திரனைப் பற்றிய அறிவை மேலும் விரிவுபடுத்துவதற்காக ஏவப்படுத்தப்பட்டது, இது சந்திரனின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள வழிவகுத்தது.

சந்திரயான்-1

2008 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு ஏவப்பட்ட சந்திரயான்-1 எனும் இந்தியாவின் முதல் லூனார் மிஷன், சந்திரனின் மேற்பரப்பில் நீரின் விரிவான இருப்பு மற்றும் மேற்பரப்பு துருவ நீர்-பனி தேக்கங்களுக்கான அறிகுறி பற்றிய தெளிவான ஆதாரங்களை அளித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 30

0

0