செப்டம்பர் 20 முதல் டிக்டாக், வி சாட்டிற்குத் தடை..! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு..!
18 September 2020, 7:26 pmஅமெரிக்க வர்த்தகத் துறை சீனாவிற்கு சொந்தமான மெசேஜிங் செயலியான வி சாட் மற்றும் வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக்கை செப்டம்பர் 20 முதல் பதிவிறக்குவதைத் தடை செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிக்டாக்கின் புதிய அமெரிக்க பதிவிறக்கங்களுக்கான தடையை அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு முன்பே ரத்து செய்ய முடியும் என்று வர்த்தக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிக்டோக் உரிமையாளர் பைட் டான்ஸ் அதன் அமெரிக்க நடவடிக்கைகளின் தலைவிதி குறித்து ஒரு உடன்பாட்டைக் கொண்டுவர தயாராக இருப்பதாக கூறப்படும் நிலையில் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
அதன் பயனர்களின் தரவின் பாதுகாப்பு குறித்த அமெரிக்காவின் கவலைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட டிக்டாக் குளோபல் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்க பைட் டான்ஸ் ஆரக்கிள் கார்ப் மற்றும் பிறருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதே நேரத்தில் அமெரிக்கத் தடையைத் தடுக்க டிரம்பின் ஒப்புதல் பைட் டான்ஸுக்கு இன்னும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் நவம்பர் 12’ஆம் தேதி வரை டிக்டாக்கிற்கான கூடுதல் தொழில்நுட்ப பரிவர்த்தனைகளைத் தடுக்க மாட்டோம் என்று வர்த்தக அதிகாரிகள் தெரிவித்தனர். இது பைட் டான்ஸ் தனது அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியுமா என்பதைப் பார்க்க நிறுவனத்திற்கு கூடுதல் நேரம் அளிக்கிறது.
இந்த நடவடிக்கைகள் “இந்த செயலிகளுக்கான அணுகலை நீக்குவதன் மூலமும், அவற்றின் செயல்பாட்டை கணிசமாகக் குறைப்பதன் மூலமும் அமெரிக்காவில் உள்ள பயனர்களைப் பாதுகாக்கும்” என்று வர்த்தகத்துறை மேலும் தெரிவித்துள்ளது.