ஆன்ட்ராய்டு போன்களுக்கும் கிளப்ஹவுஸ் வந்தாச்சு! பீட்டா சோதனை துவக்கம்

3 May 2021, 6:04 pm
Clubhouse Android app beta testing begins
Quick Share

ஆடியோ அடிப்படையிலான சமூக வலைத்தளமான கிளப்ஹவுஸ் கடந்த 2020 ஆம் ஆண்டில் ஒரு iOS பயன்பாடாக அறிமுகமானது. அதே நேரத்தில் நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆண்ட்ராய்டு பயன்பாட்டிலும் வேலை செய்ய தொடங்கியது. பயன்பாட்டின் சோதனை பதிப்புடன் நிறுவனம் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

iOS பயன்பாட்டில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சில மாற்றங்களை ஒரு வலைப்பதிவு இடுகையின் மூலம் கிளப்ஹவுஸ் சமீபத்தில் பகிர்ந்து கொண்டது. இந்த மாற்றங்களுடன், கிளப்ஹவுஸ் ஆண்ட்ராய்டு பயன்பாட்டை ஒரு சில குறிப்பிட்ட பயனர்களுக்கு பீட்டா பதிப்பாக வழங்கி சோதிக்கத் தொடங்கியுள்ளதாகவும் அந்த வலைப்பதிவு இடுகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் வாரங்களில் அதிகமான ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த பீட்டா பதிப்பை வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ட்விட்டர் பயன்பாட்டில் ‘ஸ்பேஸ்’ அம்சம் அறிமுகம் ஆவப்போவதாக வெளியான அறிவிப்பை அடுத்து,  ஆண்ட்ராய்டு பயனர்களையும் தங்கள் பக்கம் ஈர்க்க கிளப்ஹவுஸ் விரைவாக செயல்படுவதாகவும் தெரிகிறது. 

Views: - 78

0

0

Leave a Reply