கொரோனா வைரஸூம் COVID-19 னும் ஒன்று இல்லையா???

26 March 2020, 10:26 am
Quick Share

கொரோனா வைரஸ்கள் என்பது ஒரே குடும்பத்தை சேர்ந்த பல வைரஸ்கள். இவற்றுள் சில குறைவான பிரச்சனையும் ஒரு சில தீவிரமான ஆபத்தையும் தருவன. இதில் COVID-19 என்பது கொரோனா குடும்பத்தில் மிருகங்களிடம் இருந்து மனிதர்களுக்கு குதித்த ஒரு வைரஸ். நோவல் கொரோனா என்று நாம் அழைப்பது உண்மையில் COVID-19 வைரஸ் ஆகும்.

அந்த உயிர்கொல்லி வைரஸூக்கு அதிகாரப்பூர்வமாக இட்ட பெயர் தான் COVID-19. இதனை கொடூரமான மற்றும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் ஒரு வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் கூறி இருக்கிறது. கொரோனாவால் ஏற்படும் பிற நோய்களில் இருந்து  இதனை பிரித்து காட்டுவதன் நோக்கமாகவே இதற்கு இப்படி ஒரு பெயர் வழங்கப்பட்டுள்ளது.

வெறும் மூன்றே மாதங்களில் பல நாடுகளில் இந்த கொரோனா பரவி விட்டது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000 த்தை தாண்டி உள்ளது. இதனை கட்டுபடுத்துவதற்கு ஒரே வழி தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே ஆகும். எனவே பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து தங்களது மக்களை காக்க முடிந்த வரையில் தீவிரம் காட்டி வருகிறது.

கொரோனா வைரஸ்கள் என்பது ஒரே குடும்பத்தை சார்ந்த பல நோய்களை உண்டாக்கும் வைரஸ் கிருமிகள் ஆகும். அவை சாதாரண சளியில் இருந்து, ஃப்ளூ, SARS, MERS போன்ற கொடிய நோய்களையும் ஏற்படுத்தும் உயிர்கொல்லிகள். ஆனால் தற்போது அனைவரும் இப்போது உள்ள கிருமியை கொரோனா தொற்று என்று கூறி வருகின்றனர். இது டெக்னிக்கலாக முற்றிலும் தவறு. 

எல்லா வகையான கொரோனா வைரஸூம் தொற்றினை ஏற்படுத்தாது. இதில் பெரும்பாலானவை வழக்கமாக வரும் பிரச்சனையே தரக் கூடியவை. அவற்றை எளிதில் குணப்படுத்தி விடலாம். கொரோனா வைரஸால் ஏற்படும் இன்னும் ஒரு சில நோய்கள் ஆபத்துகள் அற்றவையாகவும் சிகிச்சை தேவைப்படாதவையாகவும் விளங்கும். 

இருப்பினும் SARS மற்றும் MERS போன்ற நோய்கள் மிகவும் கொடூரமானவை. அவற்றிற்கு தீவிர சிகிச்சை அளித்தாலே ஒழிய அதிலிருந்து தப்பிக்க முடியாது. அது நாள்பட்ட நுரையீரல் பிரச்சனையை ஏற்படுத்தும். தற்போது ஏற்பட்டுள்ள கொரோனாவின் ஸ்ட்ரெய்னானது புதிதாக இருப்பதால் அது ஆராய்ச்சியாளர்களை குழப்பி வருகிறது.

COVID-19 என்பது நிமோனியா மற்றும் நிறந்நர உடலுறுப்புகள் செயலிழந்து போவதை ஏற்படுத்துகிறது. முக்கியமாக இது ஏற்கனவே உடலில் நோய் கொண்டவர்வர்களையும் வயதானவர்களையும் தான் அதிகம் தாக்குகிறது. இதனால் இந்த வைரஸ் இளைஞர்களை எதுவும் செய்யாது என்ற அர்த்தம் இல்லை. பல இளைஞர்களும் இதனால் தற்போது உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த COVID-19 மிருகங்களிடம் இருந்து மனிதருக்கு குதித்த ஒரு புது வகையான கொரோனா ஸ்ட்ரெய்ட்ன். இதனால் இதனை ‘ஸ்பில் ஓவர் ஈவன்ட்’ என்று குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply