விலையுயர்ந்த எண்ணெய் இறக்குமதிகளை குறைக்க இந்திய அரசு புதிய காலக்கெடு விதிப்பு | விவரங்கள் இங்கே

7 June 2021, 10:24 am
Deadline For 20 Percent Ethanol Blended Petrol Is Now 2023 In India
Quick Share

20 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோலை 2023 ஆண்டிற்குள் முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென இந்திய அரசு  காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விலை உயர்ந்த எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மற்ற நாடுகளின் சார்ந்திருப்பைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Deadline For 20 Percent Ethanol Blended Petrol Is Now 2023 In India

20 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோலை முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான காலக்கெடு ஆரம்பத்தில் 2030 ஆக நிர்ணயம்  செய்யப்பட்டது. அதையடுத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில், அரசாங்கம் இதற்கான காலக்கெடுவை 2025 ஆம் ஆண்டிற்கு மாற்றியது. இருப்பினும், இப்போது வெளியான சமீபத்திய அறிவிப்பின்படி, இந்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு 20 சதவீத எத்தனால் பயன்படுத்த தொடங்குமாறும் 2023 ஆம் ஆண்டு முதல் எத்தனால் கலந்த பெட்ரோலை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலகின் மூன்றாவது மிக அதிக எண்ணெய் இறக்குமதி நாடு இந்தியா தா. பெட்ரோலிய பொருட்களுக்கான தேவையில் சுமார் 85% தற்போது இறக்குமதி மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது. இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும், இது நாட்டில் எரிபொருள் விலையைக் குறைக்கவும் உதவும்.

Deadline For 20 Percent Ethanol Blended Petrol Is Now 2023 In India

நடப்பு ஆண்டில், 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்பாட்டுக்குக் கொண்டுவர இந்திய அரசு இலக்கு வைத்துள்ளது. இந்த இலக்கை அடைய 4 பில்லியன் லிட்டர் எத்தனால் தேவைப்படும்.

இருப்பினும், 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அடைய, எண்ணெய் நிறுவனங்களுக்கு 10 பில்லியன் லிட்டர் எத்தனால் தேவைப்படும். எத்தனால் என்பது சர்க்கரையை பதப்படுத்தும் தொழில்களில் உற்பத்தி செய்யப்படும் ஒரு தயாரிப்பு ஆகும். அவர்கள் 6 மில்லியன் டன் உபரி சர்க்கரையை திசை திருப்பி 7 பில்லியன் லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்வார்கள். 20 சதவிகித கலவையை அடைய மீதமுள்ள அளவு அதிகப்படியான தானியங்களிலிருந்து பெறப்படும்.

கூடுதலாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, புனேயில் மூன்று E100 எத்தனால் விநியோகிக்கும் எரிபொருள் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இது எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை ஊக்குவிக்க இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

Deadline For 20 Percent Ethanol Blended Petrol Is Now 2023 In India

Views: - 113

0

0

Leave a Reply