ஆன்லைன் ஊடகங்களை முறைப்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறை திட்டம்

11 October 2020, 9:56 pm
Department of Information Technology to crack down on online media.
Quick Share

புதுடெல்லி: நாட்டில் ஆன்லைன் ஊடகங்கள் மீது எழுந்த பல புகார்களுக்கு எதிராக தகவல் தொழில்நுட்பத் துறை பல நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனாலும், இன்னும் பல தவறுகள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.

தகவல் தொழில்நுட்பத் துறை ஆன்லைன் ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தைத் தயார் செய்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக உள்ள சஷி தரூர் தலைமையின் கீழ் இந்த சட்டம் இயற்றப்படும்.

ஆன்லைன் ஊடகங்களில் தவறான, வெறுக்கத்தக்க மற்றும் பெண்களை தவறாக சித்தரிக்கும் கருத்துகளுக்கு எதிரான சட்டம் உட்பட, சட்டத்தில் பரிசீலிக்கப்பட வேண்டிய முக்கியமான 21 சிக்கல்களில் இந்த குழு முதன்மையாக கவனம் செலுத்தும்.

மேலும், சமூக ஊடகங்களில் தனிப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக சட்டமியற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் ஊடகங்களில் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதோடு சமூகத்தில் தொலைக்காட்சி சேனல்களின் ஆரோக்கியமற்ற போக்கையும் முறைப்படுத்த இந்த குழு மதிப்பாய்வு செய்து வருகிறது.

Views: - 43

0

0