டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டங்களோட விலையெல்லாம் அதிகமாகிடுச்சு! ஆனா இதை எப்படி ஃப்ரீயா வாங்கணும் தெரியுமா?

Author: Hemalatha Ramkumar
9 August 2021, 8:54 am
Disney+ Hotstar Increase Tariffs Of Plans
Quick Share

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தியாவில் அதன் திட்டங்களின் விலைகளை திருத்தியுள்ளது, இப்போது அதன் திட்டங்கள் ரூ.499 முதல் ஆரம்பம் ஆகின்றன. நிறுவனம் மூன்று புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அவை உங்களுக்கு ரூ.499, ரூ.899, மற்றும் ரூ.1,499 விலைகளில் கிடைக்கும். இருப்பினும், நிறுவனம் ரூ.399 விலையிலான திட்டத்தை நிறுத்தியுள்ளது.

ஆனால், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை இலவசமாக அணுகுவதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு உதவவே இந்த பதிவு. அதற்கு நீங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டங்களை இலவசமாக வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை, குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகியவை வழங்கும் திட்டங்கள் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். சரி, இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டங்களுக்கு இலவச அணுகலை வழங்கும் திட்டங்களின் விவரங்களை பார்க்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ திட்டங்கள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் திட்டங்களின் விலையை அதிகரித்த போதிலும், ரிலையன்ஸ் ஜியோ அதன் சலுகையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. நிறுவனம் ரூ.401, ரூ.598, ரூ.777, மற்றும் ரூ.2,599 திட்டங்கள் உடன் நன்மைகளை வழங்குகிறது. இவற்றில் ரூ.401 திட்டம் அதிகம் விற்பனையாகும் பேக் ஆக உள்ளது. இதனுடன் பயனர்கள் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான இலவச அணுகலைப் பெறுவார்கள்.

ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஏர்டெல் நிறுவனமும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான அணுகலை வழங்கும் நான்கு திட்டங்களை வழங்குகிறது, ரூ.401, ரூ.448, ரூ.599, மற்றும் ரூ.2,698 விலையிலான திட்டங்கள் இந்த சேவையை வழங்குகிறது. ரூ.401 மதிப்பிலான திட்டம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு ஒரு வருட சந்தாவுடன் 30 GB டேட்டாவை வழங்குகிறது. ரூ.448 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 செய்திகள் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

மற்ற இரண்டு திட்டங்களின் விலை ரூ. 599 மற்றும் ரூ. 2,698. இந்த திட்டங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு ஒரு வருட சந்தாவை வழங்குகின்றன; இருப்பினும், இந்த பேக்குகள் 56 நாட்கள் மற்றும் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

வோடாபோன்-ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஐந்து ப்ரீபெய்ட் பேக்குகளுடன் வோடபோன் ஐடியாவும் இதே போன்ற நன்மைகளை வழங்குகிறது. ரூ.401, ரூ.501, ரூ.601, ரூ.801, மற்றும் ரூ.2,595 திட்டங்களுடன் Vi நிறுவனம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பயன்பாட்டிற்கு விஐபி சந்தா அணுகலை வழங்குகின்றது. இந்த திட்டங்களின் நன்மைகளுடன் கூடுதலாக, பயனர்கள் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மையையும் பெறுகிறார்கள்.

Views: - 628

0

0