டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பயனரா நீங்க? பிளான் ரேட் எல்லாம் ஏறிப்போச்சு தெரியுமா?

Author: Dhivagar
29 July 2021, 9:51 am
Disney+ Hotstar user Your tariff plan set to change;
Quick Share

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தியாவில் OTT இயங்குதளத்திற்கான கட்டணத் திட்டங்களில் புதிய மாற்றங்களைச் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் புதிய வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இது தற்போதுள்ள திட்டங்களுக்கு பதிலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பயனர்களுக்கு இலவசமான சேவையுடன் இரண்டு வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. ஆண்டுதோறும் ரூ.399 செலவாகும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி திட்டம் உள்ளது, இது தரமான HD வீடியோ, டால்பி 5.1 ஆடியோ மற்றும் ஒரே திரையில் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யும் திறனுடன் கிடைக்கிறது. 

மற்றொன்று, ஆண்டுக்கு ரூ.1,499 செலவாகும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் திட்டம், இது நிறுவனம் வழங்கும் அனைத்து உள்ளடங்களையும் 4K தரத்தில், டால்பி 5.1 ஆடியோ மற்றும் இரண்டு திரைகளில் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யும் திறன் ஆகியவற்றை வழங்குகிறது. பயனர்கள் மாதத்திற்கு ரூ.299 செலுத்துவதன் மூலம் பிரீமியம் உள்ளடக்கத்தையும் அணுகலாம். ஆனால் இது விரைவில் மாறவுள்ளது.

புதிய அறிக்கையின்படி, OTT மூன்று புதிய வருடாந்திர சந்தா திட்டங்களை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த புதிய திட்டங்கள் ஆண்டுக்கு ரூ.499, ரூ.899 மற்றும் ரூ.1,499 விலைகளில் கிடைக்கின்றன. இந்த புதிய திட்டங்கள் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும். அனைத்து விவரங்களும் இங்கே:

டிஸ்னி + ஹாட்ஸ்டார் ரூ.499 மொபைல் திட்டம்

இந்த திட்டத்தின் விலை ஆண்டுக்கு ரூ.499 ஆகும். இது ஒரு திரையில் மட்டும் வீடியோவை HD தரத்தில் பார்க்க அணுகலை வழங்குகிறது. இந்த திட்டம் நெட்ஃபிலிக்ஸ் மொபைல் திட்டத்துடன் நேரடியாக போட்டியிடுகிறது.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் ரூ. 899 சூப்பர் பிளான்

இந்த திட்டத்தின் விலை ஆண்டுக்கு ரூ.899 ஆகும். இது இரண்டு திரைகளில் HD வீடியோ தரத்தில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களுக்கும் அணுகலை வழங்குகிறது. அனைத்து சாதனங்களிலும் இதற்கான அணுகல் கிடைக்கும்.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் ரூ. 1,499 பிரீமியம் திட்டம்

இந்த திட்டத்தின் விலை ஆண்டுக்கு ரூ.1,499 ஆகும். இது நான்கு திரைகளில் 4K வீடியோ தரத்தில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களுக்கும் அணுகலை வழங்குகிறது.

Views: - 308

0

0