ரியல்மீயின் குட்டி டைசோ ஸ்டார் 500, ஸ்டார் 300 ஃபீச்சர் போன்கள்! விலைய கேட்டா உடனே ஆர்டர் பண்ணிடுவீங்க!

8 July 2021, 1:49 pm
Dizo Star 500, Star 300 launched in India
Quick Share

ரியல்மீ நிறுவனத்தின் Dizo பிராண்ட் தனது இரண்டு தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டைசோ ஸ்டார் 500 மற்றும் ஸ்டார் 300 ஆகியவை நிறுவனத்தின் இரண்டு புதிய ஃபீச்சர் போன்களாகும். 

டைசோ ஸ்டார் 500, ஸ்டார் 300 விலை

பச்சை நிறத்திலான டைசோ ஸ்டார் 500 விலை இந்தியாவில் ரூ.1,799 ஆகவும் ப்ளூ கலரில் கிடைக்கும் டைசோ ஸ்டார் 300 போனின் விலை ரூ.1299 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டைசோ ஸ்டார் 500, ஸ்டார் 300 விவரக்குறிப்புகள்

டைசோ ஸ்டார் 500 2.8 இன்ச் திரை மற்றும் டைசோ ஸ்டார் 300 1.77 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஸ்டார் 500 போன் ​​1900mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மறுபுறம், டைசோ ஸ்டார் 300 போன் 2550 mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இரண்டு தொலைபேசிகளும் 5W வேகத்தில் சார்ஜ் செய்கின்றன.

ஸ்டார் 300 ஒரு செவ்வக கேமரா அமைப்பையும், ஸ்டார் 500 வட்டவடிவிலான கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. இந்த வரிசைகளில் LED ப்ளாஷ் உடன் ஒற்றை 0.3 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இரண்டு தொலைபேசிகளிலும் 2ஜி இரட்டை சிம் ஆதரவு கொண்டுள்ளது. இதில் 32MB RAM, மேலும் 32MB சேமிப்பகத்தை 64 ஜிபி வரை விரிவாக்கம் செய்ய மைக்ரோ SD கார்டு ஸ்லாட் இருக்கும். 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் சார்ஜ் செய்ய மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் ஆகியவை இருக்கும்.

ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற இந்திய மொழிகளுக்கான ஆதரவுடன் ஸ்டார் 500 கிடைக்கும். ஸ்டார் 300 பெங்காலி, பஞ்சாபி உள்ளிட்ட இன்னும் சில மொழிகளுக்கான கூடுதல் ஆதரவைப் பெறுகிறது. கூடுதல் அம்சங்களில் புளூடூத், அலாரம், காலண்டர், சவுண்ட் ரெக்கார்டர், ஒரு கோப்பு மேலாளர், FM ரேடியோ மற்றும் மியூசிக் பிளேயர் ஆகியவை அடங்கும்.

Views: - 153

0

0