டோமினோஸ் பீட்சா வாங்குனீங்களா? உங்க தகவலுக்கு மொத்தமா ஆப்பு தான்! தெரியுமா?

19 April 2021, 12:44 pm
Domino’s Pizza Data Hacked
Quick Share

டோமினோஸ் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு பீட்சா விற்பனையகம். இந்நிறுவனம் நேரடியாக கடைகளிலும் ஆன்லைன் மூலமாகவும் ஆர்டர்களைப் பெற்று பீட்சா டெலிவரி சேவையை வழங்கி வருகிறது. 

இந்த  டோமினோஸ் பீட்சா விற்பனையகத்தில் நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு விவரங்கள், email address, மொபைல் எண், பெயர், payment details போன்ற சில தகவல்களைக் கொடுக்க வேண்டியிருக்கும். இப்படி கொடுக்கப்பட்ட தகவல்கள் அந்நிறுவனத்தின் ஆன்லைனில் தளத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.

இதுபோல நிறுவனத்தின் தரவுதளத்தில் சேமித்து வைக்கபட்டிருந்த கிட்டத்தட்ட 10 லட்சம் பேரின் கிரெடிட் கார்டு விவரங்கள் உட்பட மேலும் பல விவரங்களும் ரூ.4 கோடிக்கு டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளதாக சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளரான Alon Gal என்பவர் தெரிவித்துள்ளார். 

பாதுகாப்பு நிறுவனமான ஹட்சன் ராக் நிறுவனத்தின் CTO ஆக பொறுப்பு வகிக்கும் அலோன் கால் இது குறித்து கூறுகையில், டோமினோஸ் இந்தியா தரவுத்தளத்தில் இருந்து சுமார் 13TB அளவிலான தகவல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ்கெட், BuyUcoin, Juspay, அப்ஸ்டாக்ஸ் மற்றும் பிற இந்திய நிறுவனங்கள் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து இப்போது இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் 61 லட்சம் இந்தியர்கள் உட்பட கிட்டத்தட்ட 53.3 கோடி பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆன்லைனில் கசிந்தன. கசிந்த தரவுகளில் பேஸ்புக் ID எண்கள், profile names, மின்னஞ்சல் முகவரிகள், இருப்பிடத் தகவல், பாலின விவரங்கள், வேலைத் தகவல்கள் மற்றும் பிற விவரங்களும் அடங்கியிருந்தது. இது போன்ற பல ஹேக்கிங் சம்பவங்கள் நிகழ்ந்து வரும் இந்த டோமினோஸ் தகவல் திருட்டு  பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Gal அவர்களின் ட்வீட்டுக்கு டோமினோஸ் இந்தியா நிறுவனம் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 106

0

0