உங்கள் Android போனில் இந்த ‘System Update’ தயவு செஞ்சு install பண்ணிடாதீங்க!

2 April 2021, 3:36 pm
Don’t install this ‘System Update’ on your Android phone
Quick Share

Zimperium எனும் மொபைல் பாதுகாப்பு நிறுவன ஆராய்ச்சியாளர்களின் தகவலின்படி, உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடக்கூடிய ஒரு ஆண்ட்ராய்டு மால்வேர் ஒன்று வெளியாகியுள்ளது. 

ஹேக்கர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக இந்த malware க்கு ‘சிஸ்டம் அப்டேட்’ என்று பெயரிடப்பட்டு, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு வெளியிட்டுள்ளார். இதை உங்கள் போனில் Install செய்ததும், உங்கள் ஆன்லைன் தகவல்கள் பிற செயல்பாடுகள் அனைத்தும் இந்த malware கண்காணிக்க ஆரம்பித்துவிடும், அதுமட்டுமல்லாது உங்கள் தகவல்களையும் திருடிக்கொண்டு போய்விடும். 

எப்போதும் மொபைலுக்கு வரும் update பெயரிலேயே இந்த ஸ்பைவேர் Android பயனர்களின் தகவல்களைப் பயனர்களின் அனுமதி இல்லாமலே திருடக்கூடும்.

Zimperium ஆராய்ச்சியாளர்கள் Remote Access Trojan (RAT) என்ற பிரிவின் கீழ் இந்த spyware ஐ வைத்துள்ளனர். Zimperium தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் மிட்டல் கூறுகையில் “இது நாம் கண்ட மிக அதிநவீனமான ஒரு spyware. இந்த பயன்பாட்டை உருவாக்க நிறைய நேரமும் முயற்சியும் செலவிடப்பட்டிருக்கக்கூடும். இதுபோன்ற பிற பயன்பாடுகளும் போலியான உண்மையைப் போல இருக்கவும் வாய்ப்புகள் உண்டு என்று தெரிவித்துள்ளார். அவற்றையும் கூடிய விரைவில் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, மக்கள் யாரும் இதுபோன்ற malware system update களை நம்பி ஏமாறாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவித்துள்ளார்.

எப்படி எச்சரிக்கையாக இருக்க முடியும்?
  • உங்களுக்குத் தெரியாத மூன்றாம் தரப்பு App store களிலிருந்து பயன்பாடுகளைப் பதிவிறக்குவதைத் தவிர்க்கவும். 
  • மேலும், Google Play ஸ்டோரிலிருந்து மட்டுமே பயன்பாடுகளுக்கான புதுப்பிப்புகளை மட்டுமே பதிவிறக்கவும். 
  • எல்லா System Update களுமே OEM களால் வெளியிடப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள், மேலும் Settings மெனுவில் உள்ள Updates பிரிவின் கீழ் நீங்கள் அதை காணலாம்.  
  • நம்பிக்கையான Antivirus app களுடன் வழக்கமாக உங்கள் போனை ஸ்கேன்  செய்யவும். உங்கள் பயன்பாட்டு பதிவிறக்கங்கள் மற்றும் சேமிப்பக அணுகல் ஆகியவற்றுக்கான அனுமதிகளை கட்டுப்படுத்துவதும் நல்லது.

Views: - 0

0

0

Leave a Reply