இப்படி சொல்லி டேட்டிங் கூப்பிட்டா நிச்சயமா உங்க தோழி வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க…!!!

13 January 2021, 10:53 pm
Quick Share

ஒரு பெண்ணை டேட்டிங் வர சொல்லி கேட்பது சில சமயங்களில் உங்களை பதட்டமாகவும் கவலையாகவும் ஆக்குகிறது. நீங்கள் ஏற்கனவே அந்த பெண்ணை  கவர்ந்திருந்தாலும் இது உங்களுக்கு கடினமானதாக தோன்றலாம். நீங்கள் ஒருவருக்கொருவர் ஒரு தீவிரமான உரையாடலைக் கொண்டிருந்தாலும், டேட்டிங் செல்ல உங்கள் பெண் தோழியை அழைக்க உங்களுக்கான சில டிப்ஸ் இங்கே உள்ளது.   இதில் கொடுக்கப்பட்டுள்ள ஐடியாக்கள் நிச்சயமாக வித்தியாசமானதாக இருக்கும்.  

1. வானொலியில் அவரிடம் கேளுங்கள்:

உங்கள் பெண் தோழி  வானொலியைக் கேட்பதை விரும்பினால், ஒரு வானொலி நிகழ்ச்சி மூலமாக டேட்டிங் செல்லலாமா என்று கேட்பதை நீங்கள் நிச்சயமாக சிந்திக்கலாம். அவள் வானொலியைக் கேட்காவிட்டாலும் கூட, அவளுக்காக ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு ஒரு செய்தியை அர்ப்பணித்து, அந்த நிகழ்ச்சியைக் கேட்கும்படி அவளிடம் கேட்கலாம்.  

2. ஒரு குறிப்புடன் மலர் பூச்செண்டு ஒன்றை அனுப்புங்கள்: 

டேட்டிங் செல்லும் போது தான் பூச்செண்டு கொடுக்க வேண்டும் என்று  யார் சொன்னது? ஒரு குறிப்பு எழுதிய  பூச்செண்டு ஒன்றை அவளுக்கு அனுப்புவது பற்றி நீங்கள் நிச்சயமாக யோசிக்கலாம். அழகான பூச்செண்டு தயாரிக்க லில்லி, ரோஜா போன்ற சில அழகான பூக்களை நீங்கள் தேர்வு செய்யலாம். அதன்பிறகு, அவர் உங்களுடன் ஒரு டேட்டிங் வர விரும்புகிறாரா என்று கேட்கும் கேள்வியுடன் நீங்கள் ஒரு இதயப்பூர்வமான செய்தியை எழுதலாம். உங்களுடைய இந்த சைகையை அவர் நிச்சயமாக விரும்புவார்.  உங்களை நிராகரிக்க மாட்டார்.  

3. குறிப்புடன் ஒரு கேக்கை செய்யுங்கள்:  

உங்கள் பெண் தோழியை  வெளியே கேட்பதற்கான மற்றொரு தனித்துவமான வழி, அவளுக்கு ஒரு சுவையான கேக்கை செய்து அதன் மேல் ஒரு செய்தியை எழுதுவது. அவர் உங்களுடன் டேட்டிங்  வருவாரா என்ற கேள்வியை எழுத நீங்கள் கேக்கின் ஐசிங்கைப் பயன்படுத்தலாம். இதற்குப் பிறகு, நீங்கள் அவளுக்கு கேக்கை பார்சல் செய்யலாம் அல்லது அதன் படத்தை அனுப்பலாம். உங்களுடைய இந்த செயலால் நிச்சயமாக அவர் மகிழ்ச்சி அடைவார்.  

4. சர்ப்ரைஸ் கொடுத்து  ஆச்சரியப்படுத்துங்கள்:  திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒரு மனிதன் தனது பெண் தோழியிடம் அன்பை எவ்வாறு சர்ப்ரைஸாக கூறுகிறார் என்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அது போல நீங்கள் ஆடம்பரமான ஒன்றை திட்டமிட தேவையில்லை. உதாரணமாக நீங்கள் சில ரோஜா இதழ்களுடன் ஒரு தட்டை அலங்கரித்து, ‘என்னுடன் டேட்டிங் வருவீர்களா? ‘ என எழுதி அந்த படத்தை அனுப்பலாம்.  

5. ஒரு பெட்டி நகறைய சாக்லேட்டுகளை  அனுப்புங்கள்:  

ஒரு தனித்துவமான வழியில் டேட்டிங் செல்வதை கேட்க உங்களுக்கு சாக்லேட் உதவக்கூடும். இதய வடிவிலான சாக்லேட்டுகளின் பெட்டியை ரோஜாவுடன் அனுப்பலாம் மற்றும் அவர் உங்களுடன் வெளியே செல்ல விரும்புகிறீர்களா என்று கேட்கும் குறிப்பை அதனோடு அனுப்பலாம். இந்த செயல் நிச்சயமாக அவள் முகத்தில் ஒரு புன்னகையைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.