அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தொலைத்தொடர்பு துறை | இனிமே இப்படி செஞ்சா ரூ.10,000 அபராதம்

7 July 2021, 11:06 am
DoT Plans To Impose Fine On Fraudulent Message Senders
Quick Share

இன்றைய நவீன உலகில் மக்கள் அனைவரின் கையிலும் மொபைல்போன் என்ற ஒன்று தவிர்க்கமுடியாத ஒரு சாதனமாக இருந்து வருகிறது. போன் என்பது அனைத்து தேவைகளுக்கும் ஏற்ற ஒரு சாதனம் என்றாலும் தேவையில்லாமல் வரும் சில SMS களாலும், அழைப்புகளாலும் நமக்கு எரிச்சல் தான் ஏற்படுகிறது. இது போன்று வரும் பல போலியான SMS மற்றும் அழைப்புகளால் பலரும் தங்கள் பணத்தை ஏமாந்த நிகழ்வுகளும் உண்டு.  

இது போன்று ஏமாற காரணம், உண்மையைப் போன்றே இருக்கும் போலியான தகவல் தான். இதை தடுக்க தொலைத்தொடர்பு பல நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்துக்கொண்டே தான் இருக்கிறது. அந்த வரிசையில் இப்போது ஒரு புதிய நடவடிக்கையாக போலியான செய்திகளை அனுப்பும் வணிக எஸ்எம்எஸ் அனுப்புநர்களுக்கு 1000 முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் தொலைத்தொடர்பு துறை அவற்றின் இணைப்புகளை துண்டிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

தொலைத்தொடர்பு சேவைகள் தொடர்பான மோசடிகளைக் கண்டறியவும், போலி ஐடி சான்றுகளுடன் வாங்கப்பட்ட போலி சிம் கார்டுகளை அடையாளம் காணவும், மொபைல் எண்கள் பெயர்வுத்திறன் மோசடிகளைக் கண்டறியவும், தரவு புலனாய்வு பிரிவு மற்றும் தொலைத்தொடர்பு துறை ஆகிய இரு பிரிவுகளும் அனைத்து அரசுத் துறைகளுடனும் ஒருங்கிணைந்து செயல்படும் என்று தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

நீங்களே இது போன்ற விளம்பர அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை பிளாக் செய்ய பின்வரும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம். 

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக Do Not Disturb (DND) சேவைகளை வழங்குகின்றன. 

உங்களுக்கு நிறைய ஸ்பேம் அழைப்புகள் வருகிறது எனில், அவற்றைத் தடுக்க DND ஒரு முக்கியமான சேவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

எனவே, டெலிமார்க்கெட்டர்கள், மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து வரும் அழைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்களானால், ஆன்லைன் மற்றும் செய்திகள் வழியாக அதைச் செய்ய சில டிப்ஸை உங்களுக்கு இங்கே வழங்குகிறோம்.

ஏர்டெல்: DND இயக்குவதற்கான வழிமுறைகள்

படி 1: நிறுவனத்தின் வலைத்தளமான airtel: Prepaid | Postpaid | Broadband | 4G | DTH Services in India ஐப் பார்வையிட்டு  Airtel Mobile Services  பிரிவில் கிளிக் செய்ய வேண்டும்.

படி 2: Click  Here  விருப்பத்தைக் கிளிக் செய்யவும் மற்றும் OTP ஐப் பெற உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்.

படி 3: சரியான இடத்தில் OTP ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும். அடுத்து, தோன்றும் பிரிவில் அனைத்து பிரிவுகளிலும் விளம்பரங்களைத் தடுக்க உங்களை அனுமதிக்கிறது. மேலும், வங்கிகள், ரியல் எஸ்டேட், சுகாதார கல்வி, உணவு, பானங்கள், சுற்றுலா மற்றும் பலவற்றில் இருந்து வரும் அழைப்புகளைக் கட்டுப்படுத்த நிறுவனம் உங்களை அனுமதிக்கிறது.

Vi (வோடபோன்-ஐடியா): DND இயக்குவதற்கான வழிமுறைகள்

படி 1: Vi Do Not Disturb Registration Online | DND Activation | NDNC Registry பக்கத்தை சரிபார்த்து, உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்.

படி 2: உங்கள் எண்ணில் OTP ஒன்று கிடைக்கும். அதை உள்ளிட்டு, மின்னஞ்சல் முகவரி மற்றும் பெயர் போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும்.

படி 3: பின்னர், நீங்கள் Full அல்லது Partial எனும் விருப்பத்தைக் கிளிக் செய்து Submit பொத்தானைத் தட்டவும்.

ரிலையன்ஸ் ஜியோ: DND இயக்குவதற்கான வழிமுறைகள் 

படி 1: நீங்கள் How do I activate Do Not Disturb (DND) | Reliance Jio FAQs  என்ற வலைப்பக்கத்தைப் பார்வையிட வேண்டும். MyJio ஆப் வழியாகவும் இதைச் செய்யலாம்.

படி 2: MyJio வில் உள்நுழைந்து சுயவிவரம் மற்றும் பிற அமைப்புகள் விருப்பத்துடன் Menu பிரிவில் கிளிக் செய்க. அங்குள்ள DND விருப்பத்தை கிளிக்  செய்யவும்.

படி 3: Preference பிரிவில் கிளிக் செய்து Submit பொத்தானைக் கிளிக் செய்க.

செய்திகள் வழியாக DND ஐ செயல்படுத்துவதற்கான படிகள்

ஸ்பேம் அழைப்புகளை நிறுத்த நீங்கள் 1909 க்கு ஒரு செய்தியை அனுப்ப வேண்டும். சேவைகளை நிறுத்த அதே எண்ணை அழைக்கவும் உங்களுக்கு அனுமதி உண்டு. உங்கள் மொபைல் எண்ணில் DND சேவைகளை செயல்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனம் ஒரு வாரம் எடுத்துக்கொள்ளும். 

Views: - 225

0

0