சூப்பர் யோசனை…. இந்தியாவின் நகரங்களில் கிருமி நாசினிகளை தெளிக்கும் ட்ரோன்கள்!!!

25 March 2020, 4:30 pm
Quick Share

COVID-19 இந்தியாவில் தற்போது கோர தாண்டவம் ஆடி வருவதால் மேலும் அது பரவாமல் இருக்க பல உச்சக்கட்ட நடவடிக்கைகளை இந்திய அரசு மற்றும் மாநில அரசும் எடுத்து வருகிறது. இந்தியா முழுவதையும் கிருமி நாசினிகள் மூலம் சுத்தப்படுத்தும் வேலையை இப்போது ட்ரோன்கள் செய்து வருகிறது. 

கர்நாடக மாநில அரசு பெங்களூர் மாவட்டத்தில் உள்ள எல்லா தெருக்களையும் சுத்தப்படுத்த  ட்ரோன்களை நியமித்துள்ளது. ட்ரோன்களின் உதவியுடன் பொது இடங்களில் கிருமி நாசினிகளை தெளித்து பாதுகாப்பாக இருக்க செய்து வருகிறது. 

கமிஷனர் D.H. அனில் குமார் இது குறித்து டிவிட்டரில் சமீபத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் “பொது இடங்களை சுத்தம் செய்ய கிருமி நாசினிகள் ட்ரோன்களின் மூலம் தெளிக்கப்படும். மெக்கானிக்கல் வகையில் சாலைகளை பெருக்கும் பணிகள் நடைபெறும். மேலும் இதனை செய்வதற்கு BBMP யில் இருந்து ஜெட்டிங் மெஷின்கள் பயன்படுத்தப்படும்.” என ட்வீட் செய்துள்ளார்.

அரசாங்கம் பயன்படுத்தும் இந்த ட்ரோனில் லித்தியம் ஐயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளது. இதில் ஆறு ப்ரொப்பெல்லர்களும், 15 லிட்டர் கிருமி நாசினியை கொள்ளும் அளவிற்கு டேன்கும் உள்ளது. ஆறு துளைகளின் மூலம் இந்த கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகின்றன. இதனால் சிறிய இடங்களில் கூட சுலபமாக அதனை தெளிக்கலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 நிமிடங்கள் வரை அந்த ட்ரோனால் வேலை செய்ய முடியும். மேலும் அதிக தரம் கொண்ட மோட்டார்களை பயன்படுத்தினால் ஒரு சார்ஜின் மூலம் மூன்று ஏக்கர் வரை அதனால் கிருமி நாசினிகளை தெளிக்க முடியும்.வைரஸ் வேகமாக பரவி வருவதால் ட்ரோன்களின் உதவியால் இவ்வாறு செய்வது ஒரு நல்ல முயற்சி. இது மட்டும்  இல்லாமல் ட்ரோன்களை பயன்படுத்தும் போது, மனிதன் அல்லது வாகனம் மூலமாக செய்வதை காட்டிலும் இந்த வேலை விரைவாக நடைபெற்று முடியும். 

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதே போல பூனே மற்றும் சென்னையிலும் நிலைமையை கட்டுப்படுத்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ட்ரோன்களை தவிர்த்து பல தொழில்நுட்பங்கள் கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டு தானே உள்ளது.

ஒரு சில மருத்துவமனைகளில் மனித தொடுதலை முற்றிலுமாக தவிர்ப்பதற்காக உணவு பரிமாற மற்றும் ஒரு சில மருந்துகளை தர ரோபோக்கள் உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா பரவுவதை ஓரளவு தடுக்க முடியும். இந்த கொரோனாவால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள். 

மறு அறிவிப்பு வரும் வரை அதன் தொழிற்சாலைகள் மூடப்படுவதாக அறிவிதாதுள்ளது. இருப்பினும் ஒரு சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை தயாரித்து தர வாக்களித்துள்ளது. 

இந்தியாவில் நிலைமை ஒவ்வொரு நாளும் மோசமாகிக் கொண்டே போவதால் பாதுகாப்பான முறையில் மக்களை எவ்வாறு காப்பது என அரசாங்கம் யோசித்து அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. மனிதர்களுக்கு செல்ல சிரமமாக இருக்கும் இடங்களில் கூட இந்த ட்ரோன்களால் சுலபமாக செல்ல முடியும். அரசாங்கம் ஒரு புறம் வேலை பார்த்து வந்தாலும் மக்களிடம் அவர்கள் கேட்டுக் கொள்ளும் ஒரே வேண்டுதல் வீட்டில் இருப்பதே ஆகும்.