ஆன்லைனிலேயே டாக்டரிடம் மருத்துவ ஆலோசனை! மத்திய அரசின் அற்புதமான திட்டம்… eSANJEEVANI

16 April 2021, 11:03 am
esanjeevani opd tamil nadu
Quick Share

மத்திய அரசு பல சிறப்பான திட்டங்களை எல்லாம் மக்களுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதை பற்றிய விழிப்புணர்வு தான் நம்மிடம் இருப்பதில்லை.

இப்போதெல்லாம் இந்த மாறி வருகிற நவீன உலகில் நம்மில் பெரும்பாலோருக்கு ஏதோ ஓர் உடல் நலம் சார்ந்த பிரச்சினை இருக்க தான் செய்கிறது. அது எல்லாம் ஒரு பக்கம் இருக்கையில், இந்த கொரோனா போன்ற தொற்று வேறு வேகமாக பரவிக் கொண்டு இருக்கிறது.  

சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம். நம் எல்லோர் வீட்டிலும் வயதான தாத்தா, பாட்டி, அம்மா மற்றும் அப்பா என  பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு மாறிவரும் வேலை முறைகள், சுற்றுப்புற சூழல்கள் மற்றும் உணவு முறைகள் காரணமாக low Blood pressure, high blood pressure, சர்க்கரை நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற சிக்கல்கள் இருக்கலாம். இது போன்ற பிரச்சினைகளுக்கு அவர்கள் தினமும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக்கூடியவர்களாகவும் இருக்கலாம்.

மாத்திரைகளை வாங்க அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி இருக்கும். அதுவும் இந்த வாட்டி வதைக்கும் வெயிலிலும், கொரோனா பரவி வரும் சூழலிலும் ஊரடங்கு வேற போடப்படுவதால் மருத்துவரிடம் செல்லவே தயக்கத்துடன் இருப்பார்கள்.

ஏன், சொல்லப்போனால் இந்த சூழலில் சாதாரண தலைவலி அல்லது காய்ச்சல் வந்தால் கூட பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்குப் போக கூட தயங்குவர்.

இதுபோன்ற சூழல்களில் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட மத்திய அரசு அறிமுகம் செய்ததுதான் eSanjeevani எனும் ஆன்லைன் சேவை தளம். இது எப்படி உதவியாக இருக்கும், இதன் மூலம் எப்படி பயன்பெறுவது தெரிஞ்சுக்கலாம் வாங்க.

இந்த eSanjeevani என்பது நோயாளிகளையும் மருத்துவர்களையும் இணைக்கும் ஒரு ஆன்லைன் தளம். வளர்ந்து வரும் இணைய உலகில் நாம் எதையும் தேடிப் போக வேண்டியதில்லை. எல்லாம் தானாகவே நம்மைத் தேடி வரும். இந்த  eSanjeevani சேவையை சாதாரணமாக நாம் வைத்திருக்கும் ஸ்மார்ட்போனிலேயே பெற முடியும்.

 • இதற்கு முதலில் https://esanjeevaniopd.in/Register என்ற வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.
 • அடுத்து Patient Registration என்பதை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும்.
 • உங்கள் மொபைல் எண் உள்ளிட்டு, அங்குள்ள Drop-down பட்டியலில் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.  
 • அடுத்து General OPD அல்லது Speciality OPD என்பதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். 
 • OPD வகையைத் தேர்ந்தெடுத்து, Send OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
 • அடுத்து Patient Details எல்லாம் டைப் செய்ய வேண்டும். அடுத்து உங்க District ஐ தேர்வு செய்ய வேண்டும். 
 • இதை நீங்கள் செய்து முடித்ததும் ஆன்லைனில் இருக்கும் மருத்துவர், Video Call மூலம் உங்களுக்கு Consultation வழங்குவார். 
 • மருத்துவர் உங்கள் பிரச்சினை இன்னதென கண்டறிந்ததும் Tablets prescription ஐ ஆன்லைனிலேயே மெசேஜ் மூலம் அனுப்பிவிடுவார்.
 • உங்கள் அருகில் இருக்கும் Pharmacy க்கு சென்று, அந்த மருந்துகளை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

eSanjeevani மூலம்  மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள்:

 • இது முழுமையாக இலவசமான சேவை.
 • போலி மருத்துவர்கள் என்று பயப்பட வேண்டியதில்லை.
 • வீண்  அலைச்சல்  இல்லை.
 • இந்த  சேவை ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை  10 மணி முதல் மதியம் 3 மணி  வரை  கிடைக்கும்.  

Views: - 54

0

0