எக்ஸைடெல் வழங்கும் மூன்று புதிய Stay-at-home பிராட்பேன்ட் திட்டங்கள்!

14 May 2021, 7:48 am
Excitel launches three new stay-at-home bundle data plans
Quick Share

எக்ஸைடெல் வியாழக்கிழமை தனது சந்தாதாரர்களுக்காக மூன்று புதிய பிராட்பேண்ட் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டங்கள் 100Mbps, 200Mbps மற்றும் 300Mbps என வெவ்வேறு டேட்டா வேகங்களில் கிடைக்கின்றன.

முதலில் 100Mbps திட்டம் ரூ.565 விலையில் மூன்று மாதங்களுக்கு கிடைக்கும். buffer-free ஸ்ட்ரீமிங்கிற்கு இந்த திட்டம் பொருத்தமானது என்று எக்ஸைடெல் கூறுகிறது. 

அடுத்தது 200Mbps திட்டம் ரூ.638 விலையில் கிடைக்கும் மற்றும் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும். வீட்டிலிருந்து தடையின்றி வேலை செய்வதற்கு வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை பெறலாம் என்று நிறுவனம் கூறுகிறது. 

இறுதியானது 300Mbps திட்டம் ரூ.752 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் மூன்று மாதங்களுக்கு தடையில்லாத் கேமிங் அனுபவத்திற்கு ஏற்ற  ஒரு திட்டம் என்று நிறுவனம் கூறுகிறது.

2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மேலும் 10 நகரங்களில் தனது பிராட்பேண்ட் சேவைகளை அறிமுகப்படுத்தியதாக எக்ஸைடெல் சமீபத்தில் அறிவித்தது. புதிதாக சேவை துவங்கப்பட்ட நகரங்களில் தெலுங்கானாவிம் நிஜாமாபாத் & கம்மம்; ராஜஸ்தானின் ராவத்ஸர்; காக்கினாடா & பீமாவரம், ஆந்திரா; ஃபருகாபாத், பத்ரௌனா, அக்பர்பூர் மற்றும் உத்தரபிரதேசத்தில் சோன்பத்ரா மற்றும் கர்நாடகாவின் மங்களூர் ஆகியவை அடங்கும்.

Views: - 193

0

0