இனி உங்கள் பேஸ்புக் ப்ரொபைலை லாக் செய்து கொள்ளலாம்…. எப்படி தெரியுமா???

22 May 2020, 8:15 pm
Facebook Launches ‘Lock Profile’ Feature in India for Better Privacy
Quick Share

உலகில் உள்ள அனைவரையும் இணைப்பதன் மூலமாக பேஸ்புக் உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக வலம் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் பாதுகாப்பு பொருத்த வரை பெரும் பின்னடைவை கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் அக்கௌன்டில் இருந்து அவர்களது புகைப்படங்களை போலி அக்கௌன்ட் மூலமாக எடுத்து வருகிறார்கள் ஒரு சிலர். 

இதனால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பேஸ்புக் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. அதாவது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் உங்களை தனிப்பட்ட புகைப்படங்களை பார்க்காமல் இருக்கும்படி லாக் செய்து விடலாம். இது தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 

இதன் மூலம் உங்கள் ப்ரொபைலை லாக் செய்து விட்டால் பிற பயனாளர்கள் உங்கள் ப்ரொபைல் படத்தை மட்டுமே பார்க்க முடியும். உங்கள் பெர்சனல் புகைப்படங்கள் மற்றும் ஆல்பங்களை பார்க்க இயலாது. இந்த புகைபடங்களை பயனாளர்கள் பிறருக்கு பகிரவோ அல்லது டவுன்லோடு செய்யவோ முடியாது. 

“தாங்கள் நினைத்ததை செய்வதற்கான ஒரு பாதுகாப்பான தளமாக பேஸ்புக் இருக்கும். பாதுகாப்பு குறித்து இந்தியாவில் உள்ள மக்களின் கவலை எங்களுக்கு புரிகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் தங்கள் புகைப்படங்களை காப்பாற்றப்படும் பாடை நாங்கள் அறிவோம். இதற்காக இன்று ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளோம். இதன்மூலம் பயனாளர்களின் பாதுகாப்பு சரி வர பேணப்படும்.” என்று சொல்கிறார் பேஸ்புக்கின் பப்ளிக் பாலிசி டேரக்டர் அன்கி தாஸ்.

புதிதாக பதிவேற்றப்படும் புகைப்படங்கள் மற்றும் போஸ்ட் ஆகிய அனைத்துமே லாக் செய்யப்பட்டிருக்கும். இதற்காக லாக் செய்யப்பட்ட பயனாளர்களை எந்த ஒரு போஸ்டிலும் டேக் செய்ய முடியாது என்ற அர்த்தம் கிடையாது. ஆனால் இந்த டேக் செய்யப்பட்ட போஸ்ட் லாக் செய்யப்பட்டுள்ள பயனாளரின் டைம் லைனில் காட்டாது. 

“இளம் பெண்கள் தங்கள் புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர தயக்கம் காட்டி வருவது தற்போது அதிகமாகி வருகிறது.அவர்களின் தகவல்களை யாரேனும் தவறாக பயன்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம் அவர்களிடத்தில் இருந்து வருகிறது. இதனை எதிர்கொள்ள பேஸ்புக் தற்போது எடுத்துள்ள முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது. இது பெண்கள் அதிலும் இளம் பெண்களுக்கு நிச்சயமாக ஒரு பாதுகாப்பு வலையத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.” என்று கூறுகிறார் சென்டர் ஃபார் சோஷியல் ரிசர்ச் டேரக்டர் ரஞ்சனா குமாரி.

குறிப்பாக இது பெண்களுக்கானது என்று சொன்னாலும் ஆண்களின் பாதுகாப்பிற்கும் இது உதவும். இந்த அம்சமானது இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடப்பட்டு வருகிறது. உங்கள் அக்கௌன்ட் இதனை பெற்ற பிறகு உங்கள் பெயருக்கு கீழே உள்ள மோர் ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ‘லாக் ப்ரொபைல்’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். பிறகு ‘லாக் யுவர் ப்ரொபைல்’ யை கிளிக் செய்தால் உங்கள் ப்ரொபைல் லாக் செய்யப்படும்.

Leave a Reply