இனிமேல் பேஸ்புக் மெசஞ்சர் செயலியிலும் வாட்ஸ்அப் போன்ற கட்டுப்பாடு!
4 September 2020, 8:44 amவாட்ஸ்அப் செயலியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் ஒன்றை இப்போது பேஸ்புக் மெசஞ்சரிலும் அறிமுகப்படுத்தப்போவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து, இனி மெசஞ்சர் செயலியில் ஒரு நேரத்தில் அதிகபட்சம் ஐந்து நபர்கள் அல்லது குழுக்களுக்கு மட்டுமே செய்திகளை அனுப்ப முடியும்.
வியாழக்கிழமை அன்று வெளியான ஒரு அதிகாரப்பூர்வ வலைப்பதிவு இடுகையில், மெசஞ்சர் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கான தயாரிப்பு நிர்வாகத்தின் இயக்குனர் ஜெய் சல்லிவன் கூறுகையில், தவறான தகவல் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கும் மக்களுக்கு பாதுகாப்பான, அதிக உண்மையான தகவலை வழங்குவதற்கும் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறினார்.
உலகளாவிய COVID-19 தொற்றுநோய் தொடர்ந்து சீற்றமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா உட்பட பல நாடுகள் பொதுத் தேர்தல்களை நடத்தத் தயாராகி வருவதால், தவறான தகவல்களைப் பரப்புவதைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியமானது என்றும் சல்லிவன் கூறுகிறார். இந்த நடவடிக்கை குழப்பத்தை ஏற்படுத்தும், நிச்சயமற்ற தன்மையை தடுக்கவும் துல்லியமான தகவல்களை மக்களுக்கு வழங்க உதவும்.
ஸ்பேமர்களையும் தீங்கிழைக்கும் அவர்கள் பரப்பும் தவறான தகவல்களையும் ஒதுக்கி வைத்து பயனர்களுக்கு உதவவே பேஸ்புக் இதுபோன்ற சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சல்லிவன் மேலும் எடுத்துரைத்தார். இந்த தளம் முன்னர் பாதுகாப்பு அறிவிப்புகள், இரண்டு காரணி அங்கீகாரம் மற்றும் தேவையற்ற செய்திகளைத் தடுக்க மற்றும் புகாரளிப்பதற்கான எளிய வழிகள் போன்ற அம்சங்களை அறிமுகப்படுத்தியது.
இப்போது வெளியாகியுள்ள இந்த புதிய அம்சம் வைரஸ் பற்றிய தவறான தகவல் அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தின் பரவலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பின் மற்றொரு அடுக்கை வழங்குகிறது, மேலும் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
வாட்ஸ்அப் தளத்தில் இதுபோன்று எடுக்கப்பட்ட நடவடிக்கை பயனர்களிடமிருந்து அதிக எதிர்ப்பு எதையும் பெறவில்லை, இதன் காரணமாக இந்த கட்டுப்பாட்டை தனது மற்ற சமூக ஊடக தளங்களிலும் அமல்படுத்த ஃபேஸ்புக் முயற்சிகளை எடுத்து வருகிறது.
0
0