பேஸ்புக் பயனரா நீங்க? உங்கள் போன் நம்பர் ரூ.1,500 க்கு விற்பனை!

26 January 2021, 3:53 pm
Facebook User? Your Phone Number Is On Sale
Quick Share

பேஸ்புக்கைப் பற்றி ஏற்கனவே பல சர்ச்சைகள் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை குறித்த சர்ச்சைகளில் சிக்கி பின்னர் அதற்கான விளக்கங்களைத்  தந்து அதற்கான அமல்படுத்தும் தேதியை மே மாதத்திற்கு ஒத்தி வைத்தது. 

இப்போது, ஃபேஸ்புக் நிறுவனம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது, இதுவும் பயனரின் தனியுரிமை பற்றியது தான். நீங்கள் இப்போது ஒரு டெலிகிராம் பாட் வழியாக பேஸ்புக் பயனரின் தொலைபேசி எண்ணை வெறும் $20 க்கு வாங்க முடியும. அதுமட்டும் இல்லை, நீங்கள் பேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்களை மொத்தமாக வாங்கும்போது உங்களுக்கு தள்ளுபடியும் உண்டு.

பாதுகாப்பு ஆய்வாளர் அலோன் கேல் (ALON GAL) அவர்களின் ட்வீடின்படி, 533 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் தொலைபேசி எண்கள் உட்பட பல முக்கியமான தகவல்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. அறிக்கையின்படி, இந்த விவரங்கள் அனைத்தும் 2019 ஆம் ஆண்டில்  ஏற்பட்ட சிக்கலை ஃபேஸ்புக் சரி செய்வதற்கு முன்பு பெறப்பட்டவை.

டெலிகிராம் பாட் (Telegram Bot)டில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் 15 நாடுகளைச் சேர்ந்த பயனர்களைப் பற்றிய தகவல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்திய பேஸ்புக் பயனர்களின் தரவுகளும் இதில் இருக்கிறதா என்பதை பற்றி எந்த தகவலும் இல்லை. நீங்கள் 2019 க்கு முன்பு பேஸ்புக்கில் சேர்ந்து உங்கள் தொலைபேசி எண் போன்ற விவரங்களைக் கொடுத்திருந்தால், உங்கள் தரவுகளும் இதில் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

உங்களிடம் ஒரு நபரின் பேஸ்புக் பயனர் ஐடி இருந்தால், டெலிகிராம் பாட்டைப் பயன்படுத்தி தொலைபேசி எண் போன்ற விவரங்களைக் கண்டுபிடிக்க முடியும். இது இலவசம் ஒன்றும் கிடையாது. நிச்சயமாக, இந்த தகவலைப் பெற ஒரு விலை உள்ளது. ஒரு கிரெடிட்டுக்கு, நீங்கள் $ 20 செலுத்த வேண்டும், அல்லது 10,000 தொலைபேசி எண்களைப் பெற $ 5,000 செலுத்தலாம்.

டெலிகிராம் பாட் ஜனவரி 12, 2021 முதல் செயலில் உள்ளது, மேலும் இது 2019 அல்லது அதற்கு முந்தைய தரவுகளை மட்டுமே கொண்டுள்ளது. எனவே, நீங்கள் $20 செலுத்தினாலும் 2019 க்குப் பிறகு இணைந்த பயனரின் தொடர்பு விவரங்களை கண்டுபிடிக்க முடியாது.

இதற்கு பேஸ்புக் என்ன பதிலளிக்கப்போகிறது? இந்த தகவல்களை டெலிகிராம் அகற்றுமா இல்லையா என்பது பற்றி எந்த தகவலும் இதுவரை இல்லை. கூடுதல் அப்டேட்டுகளுக்கு Updatenews360 உடன் இணைந்திருங்கள்.

Views: - 0

0

0