PUBG மொபைல் கேமின் போட்டியாளரான FAU-G கேமின் முன்பதிவு துவக்கம்!
1 December 2020, 4:29 pmnCore கேம்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு ஆத்மநிர்பார் ஷூட்டிங் கேம் தான் FAU-G. இந்த FAU-G கெமுக்கான முன் பதிவு பிளே ஸ்டோரில் துவங்கியுள்ளது. இந்த கேம் எப்போது வெளியாகும் என்பதற்கான சரியான தேதி எதுவும் இல்லை, ஆனால் முன் பதிவுகள் தொடங்கியுள்ளதால், இந்த கேம் விரைவில் வெளிவரக்கூடும்.
nCore கேம்ஸ் நேற்று தங்கள் ட்விட்டர் கணக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டது. பதிவுக்கான இணைப்பும் அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் நீங்கள் பதிவுசெய்ததும், கேம் பதிவிறக்கத்திற்கு கிடைக்கும்போது Google Play உங்களுக்கு அறிவிப்பைக்கொடுக்கும். இது பெரும்பாலான கேம்களில் கிடைப்பது போன்ற முன்பதிவு வெகுமதி என்று எதுவும் இல்லை,.
முன் பதிவு செயல்முறை ஆன்ட்ராய்டு பயனர்களுக்காக Play Store இல் மட்டுமே நேரலையில் உள்ளது. இப்போதைக்கு iOS பயனர்கள் இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
முன்பு வெளியான டீஸரின்படி, இந்த கேம் முதல் அத்தியாயத்தில் கால்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை பிரதிபலிக்கும்.
பிரதமர் மோடியின் ஆத்மனிர்பர் இயக்கத்திற்கு ஆதரவாக இந்த விளையாட்டு தொடங்கப்பட்டு பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது என்று என் கோர் கேம்ஸின் இணை நிறுவனர் விஷால் கோண்டல் தெரிவித்துள்ளார்.
0
0