ECG வசதி, EDA சென்சார் போன்ற பல அம்சங்களுடன் Fitbit Charge 5 ஸ்மார்ட்பேன்ட் அறிமுகம் | விலை & விவரங்கள்

Author: Dhivagar
27 August 2021, 9:13 am
Fitbit has launched its latest health and fitness tracker, the Charge 5, in India
Quick Share

ஃபிட்பிட் தனது சமீபத்திய உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு சாதனமான சார்ஜ் 5 ஐ இந்தியாவில் ரூ.14,999 விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இதன் அதிகாரப்பூர்வ விற்பனை தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.

இதன் சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்பேன்ட், மன அழுத்தம், SpO2, இதய துடிப்பு மாறுபாடு மற்றும் தோல் வெப்பநிலை போன்ற உடல் நிலைகளை அளவிடுவதன் மூலம் கண்காணிப்பை மிகவும் எளிதானதாக்குகிறது.

Fitbit has launched its latest health and fitness tracker, the Charge 5, in India

இது தினசரி ரெடினெஸ் ஸ்கோர், ஆக்டிவ் ஜோன் மினிட்ஸ் போன்ற அம்சங்களுடன் ஏழு நாட்கள் வரை பேட்டரி லைஃப் வழங்கும்.

வடிவமைப்பு விவரங்கள்

  • ஃபிட்பிட் சார்ஜ் 5 ஸ்மார்ட்பேன்ட் ஆனது ஃபிட்பிட் சார்ஜ் 4 ஐ விட வளைந்த விளிம்புகள் மற்றும் சற்று மெலிதான உடலுடன் ஒரு செவ்வக டயல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
  • இது ஒரு மெட்டல் கேஸ், இன்ஃபினிட்டி பேன்ட்ஸ், 50 மீட்டர் நீர் எதிர்ப்பு ஆகியவற்றுடன் வருகிறது, மேலும் மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.
  • இந்த அணியக்கூடிய ஸ்மார்ட்பேன்ட் 1.04 அங்குல AMOLED கலர் டிஸ்பிளேவுக்கு கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே (AOD) ஆதரவுடன் உள்ளது.
Fitbit has launched its latest health and fitness tracker, the Charge 5, in India

சென்சார் விவரங்கள்

  • ஃபிட்பிட் சார்ஜ் 5 இல் “பல்நோக்கு மின்சார சென்சார்கள்” உள்ளன, இது ECG ஆப் மூலம் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (AFib) க்கான பயனரின் இதய தாளத்தை கண்காணிக்க அனுமதிக்கிறது – இது மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் பொதுவான இதய பிரச்சினை என்பதால் இதை அவ்வப்போது கண்காணிப்பது மிகவும் உதவியாக இருக்கும்.
  • இது EDA (Electrodermal Activity) சென்சார் கொண்டுள்ளது, இது மன அழுத்தத்திற்கு உடலின் எதிர்வினைகளைக் கண்டறியும். இந்த ஸ்மார்ட்பேன்ட் ஒரு தோல் வெப்பநிலை சென்சார் மற்றும் ஒரு SpO2 சென்சார் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.
  • உடல்நலம் தொடர்பான அம்சங்களைத் தவிர, ஃபிட்பிட் சார்ஜ் 5 வெளிப்புற செயல்பாடுகளைக் கண்காணிக்க GPS ரிசீவர் உடன் பொருத்தப்பட்டுள்ளது.
Fitbit has launched its latest health and fitness tracker, the Charge 5, in India

கூடுதல் அம்சங்கள்

  • மேலும், பல விளையாட்டு மற்றும் செயல்பாட்டு முறைகளுடன், முன்-திட்டமிடப்பட்ட உயர்-தீவிர இடைவெளி பயிற்சி முறைகள் மற்றும் Fitbit Pay போன்ற அம்சங்களையும் இது வழங்குகிறது.
  • இந்த அணியக்கூடியது சாதனம் ஏழு நாட்கள் நீடித்து இயங்கும் என்று கூறப்படுகிறது, இருப்பினும், தொடர்ச்சியாக GPS செய்யப்பட்டிருந்தால், ஐந்து மணி நேரத்திற்குள் சார்ஜ் தீரும்.
Fitbit has launched its latest health and fitness tracker, the Charge 5, in India

விலைகள்

இந்தியாவில், ஃபிட்பிட் சார்ஜ் 5 ரூ.14,999 விலை கொண்டுள்ளது மற்றும் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர உள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஃபிட்பிட் ஆறு மாத பிரீமியம் மெம்பர்ஷிப்பை இலவசமாக வழங்கும்.

Views: - 260

0

0