ரூ.200 க்கு கீழ் ஏர்டெல் வழங்கும் 5 மலிவான ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல்

19 November 2020, 12:36 pm
five cheapest recharge plans of Airtel under Rs 200 , 1GB data daily 191120
Quick Share

கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக, இன்னும் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்தே தங்கள் பணிகளை செய்து வருகின்றனர். நண்பர்கள், உறவினர்களுடன் வீட்டிலிருந்து ஸ்மார்ட்போன்கள் மூலம் இணைப்பில் இருக்கின்றனர். இது தவிர, பெரும்பாலான அரசு மற்றும் தனியார் ஊழியர்களும் தங்கள் அலுவலக வேலைகளை வீட்டிலிருந்தே செய்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், அனைத்து மக்களுக்கும் நல்ல மற்றும் மலிவான ப்ரீபெய்ட் திட்டம் என்பது முக்கியமான தேவையாக இருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் மிகவும் மலிவான ரீசார்ஜ் திட்டத்தில் சிறந்த அம்சங்களை அளிக்கிறது. நிறுவனத்தின் திட்டங்களில் வாடிக்கையாளர்கள் ரூ.200 க்கும் குறைவான விலையிலான திட்டங்களில் தினமும் 1 ஜிபி வரை வரை பெறுகிறார்கள்.

ஏர்டெல்லின் ஐந்து மலிவான ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

19 ரூபாய் திட்டம்

இது இரண்டு நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில், வாடிக்கையாளர்கள் 200MB தரவைப் பெறுகின்றனர். இது தவிர, திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகளுக்கான சலுகையும் உள்ளது.

129 ரூபாய் திட்டம் 

இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி தரவு கிடைக்கும். இந்த தரவு 24 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் கிடைக்கும். இது தவிர, கூடுதல் நன்மைகளில் இலவச ஹெலோட்டூன்ஸ், விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் அணுகல் ஆகியவை அடங்கும்.

149 ரூபாய் திட்டம் 

இதில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி தரவு கிடைக்கும். இது 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் கிடைக்கும். இலவச ஹெலோட்டூன்ஸ், விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் அணுகல் ஆகியவை பொழுதுபோக்குக்கான கூடுதல் நன்மைகள் ஆகும்.

179 ரூபாய் திட்டம் 

இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் 2 ஜிபி தரவைப் வழங்குகிறது. இது தவிர, வரம்பற்ற அழைப்பு, 300 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த ரீசார்ஜ் திட்டத்தில், பாரதி AXA லைஃப் நிறுவனத்திடமிருந்து ரூ.2 லட்சத்திற்கான கால ஆயுள் காப்பீடும் கிடைக்கும். பொழுதுபோக்குக்காக, இந்த திட்டத்தில் இலவச ஹெலோட்டூன்ஸ், விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகியவை அடங்கும்.

199 ரூபாய் திட்டம்

இதனுடன், வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை தினமும் கிடைக்கும். இது 24 நாட்கள் செல்லுபடியாகும். இலவச ஹெலோட்டூன்ஸ், விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகியவற்றிற்கான அணுகல் பொழுதுபோக்குக்கான திட்டத்தில் கூடுதல் நன்மைகளுடன் வழங்கப்படுகிறது.

Views: - 0

0

0

1 thought on “ரூ.200 க்கு கீழ் ஏர்டெல் வழங்கும் 5 மலிவான ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல்

Comments are closed.