பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள்: போகோ போன்களுக்கான தள்ளுபடி விவரங்கள் வெளியானது!

By: Dhivagar
10 October 2020, 4:13 pm
Flipkart Big Billion Days sale: Poco M2, M2 Pro, X2 available with discounts
Quick Share

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் நாட்கள் விற்பனை அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21 வரை தொடர திட்டமிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் பல்வேறு பிரிவுகளில் உள்ள தயாரிப்புகளில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கப்போவதாக முன்னோட்டங்களை வெளியிட்டு வருகிறது. போகோ இப்போது தனது ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியுடன் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.

ட்விட்டரில் போகோ தனது ஸ்மார்ட்போன்கள் முதல் முறையாக தள்ளுபடியுடன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த வரிசையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போகோ C3, போக்கோ M2, போக்கோ M2 புரோ, போக்கோ X2 மற்றும் போக்கோ X3 ஆகியவை அடங்கும். 

ரூ.10,999 விலைக்கொண்ட போகோ M2 இந்த பிளிப்கார்ட் விற்பனையின் போது, ரூ.10,499 விலையில் கிடைக்கும். ரூ.13,999 விலைக்கொண்ட போகோ M2 ப்ரோ ரூ.12,999 என்ற தள்ளுபடி விலையில் சில்லறை விற்பனை செய்யப்படும்.

போக்கோ X2 ரூ1,000 தள்ளுபடியுடன் கிடைக்கும். அதாவது ரூ.17,499 விலைக்கு பதிலாக ரூ.16,499 விலையில் விற்பனை செய்யப்படும். போக்கோ X3 பட்டியலிடப்பட்டுள்ளது, ஆனால் இந்த ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு இல்லை. போகோ X3 ரூ.16,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இதே போல அடிப்படை மாடலான போகோ C3 ரூ.7,499 விலையில் கிடைக்கும். இருப்பினும், இந்த தொலைபேசிகளில் பயன்படுத்தக்கூடிய SBI கார்டுகளுக்கு 10% உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.

போகோ C3 நிறுவனம் அறிமுகப்படுத்திய சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆகும். இது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன், இது 3 ஜிபி + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி ஆகிய இரண்டு வகைகளில் வருகிறது, இதன் விலை ரூ.8,999 ஆகும். போக்கோ C3 6.53 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக்கின் ஹீலியோ G35 செயலி மற்றும் 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 12 உடன் இயக்குகிறது, மேலும் இது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Views: - 49

0

0