சுமார் 31000 ரூபாய் தள்ளுபடி விலையில் ஐபோன் 11 ப்ரோ! அசத்தலான ஆபஃர்களை அள்ளித்தரும் பிளிப்கார்ட்

12 July 2021, 2:55 pm
Flipkart Electronics Sale: Deals and discounts on bestselling smartphones
Quick Share

பிளிப்கார்ட் இந்தியாவில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விற்பனையை கவர்ச்சிகரமான ஒப்பந்தங்கள் உடன் வழங்கி வருகிறது. இந்த விற்பனையின் போது எதிர்பார்க்க முடியாத பல அசத்தலான சலுகைகளை வழங்குகிறது. 

ஜூலை 13 ஆம் தேதியுடன் முடிவடையும் இந்த விற்பனையின் கீழ், ஆன்லைன் வணிக நிறுவனம் ஆக்சிஸ் வங்கி கார்டுகளுடன் 10% உடனடி தள்ளுபடி வழங்குகிறது, அது மட்டுமில்லாமல் நோ காஸ்ட் EMI விருப்பங்கள் மற்றும் எக்சேஞ்ச் சலுகைகளையும் வழங்குகிறது. இந்த விற்பனையின் போது தள்ளுபடி விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரியல்மீ 8 5ஜி

ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.13,999 (MRP: ரூ.15,999) விலையில் கிடைக்கிறது. அது மட்டுமில்லாமல் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கும்போது கூடுதலாக 5% கேஷ்பேக் கிடைக்கும்.

இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் பஞ்ச்-ஹோல் வடிவமைப்பையும், 90 Hz புதுப்பிப்பு வீதத்தையும் 6.5 அங்குல முழு HD+ (1080×2400 பிக்சல்கள்) LCD டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது.

இந்த சாதனம் மீடியா டெக் டைமன்சிட்டி 700 சிப்செட்டில் இயங்குகிறது, இது 8ஜிபி வரை RAM மற்றும் 5,000 mAh பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Mi 10T

Mi 10T ஸ்மார்ட்போனை இந்த தள்ளுபடி விற்பனையின்போது வாங்கினால் ரூ. 39,999 மதிப்பிலான ஸ்மார்ட்போனை எக்சேஞ் ஆஃபர் மற்றும் வங்கி தள்ளுபடி ஆகியவற்றோடு பெறும்போது ரூ.25,499 விலையில் வாங்க முடியும்.

இது 6.67 இன்ச் ஃபுல்-எச்டி+ (1080×2400 பிக்சல்கள்) LCD டிஸ்பிளேவை 144 Hz புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ரீடரைக் கொண்டுள்ளது.

இந்த போன் ஒரு ஸ்னாப்டிராகன் 865 செயலி, 8 ஜிபி RAM, 128 ஜிபி சேமிப்பு மற்றும் 33 W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஆசஸ் ROG போன் 5

பிளிப்கார்ட்டில் ரூ.55,999 மதிப்பிலான ஆசஸ் ROG போன் 5 ரூ.49,999 விலையில் விற்பனைச் செய்யப்படுகிறது.

இது 6.78 அங்குல முழு-HD+ (1080×2448 பிக்சல்கள்) AMOLED திரை 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் மற்றும் பின்புறத்தில் ஒரு RGB லைட் பேனலுடன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கைபேசியில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 16 ஜிபி RAM வரை, 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000 mAh பேட்டரி உள்ளது.

ஐபோன் 11 புரோ

ரூ. 1,06,600 மதிப்பிலான ஐபோன் 11 ப்ரோ ரூ.74,999 விலையில் கூடுதலாக ரூ.15,300 க்கான பரிமாற்ற சலுகையுடன் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இது IP68-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பு மற்றும் 5.8 இன்ச் ஃபுல்-HD+ (1125×2436 பிக்சல்கள்) HDR 10 ஆதரவுடன் OLED திரையைக் கொண்டுள்ளது.

இந்த போன் A13 பயோனிக் செயலியில் இயங்குகிறது, அதோடு 4 ஜிபி RAM, 512 ஜிபி வரை ஸ்டோரேஜ், மற்றும் 3,046 mAh பேட்டரி 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவற்றுடன் இயங்குகிறது.

Views: - 164

1

0