பிளிப்கார்ட் மொபைல்ஸ் போனான்ஸா விற்பனை: தள்ளுபடிகளுடன் கிடைக்கும் மொபைல்களின் பட்டியல்!

7 April 2021, 3:49 pm
Flipkart Mobiles Bonanza sale is now live
Quick Share

பிளிப்கார்ட்டின் மொபைல் போனான்ஸா விற்பனை இன்று இந்தியாவில் துவங்கி ஏப்ரல் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ரியல்மீ C12, போகோ M3, ஐபோன் 11, ரியல்மீ 7, மோட்டோ G10 பவர் மற்றும் பல ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட் தள்ளுபடிகளை வழங்குகிறது. 

மேலும், சியோமி நிறுவனமும் இந்தியாவில் ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 13 வரை Mi ஃபேன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனையை வழங்கும். இந்த பிளிப்கார்ட் விற்பனையின் போது கிடைக்கும் சில சிறந்த சலுகைகளின் விவரங்கள் இதோ.

ஆப்பிள் ஐபோன் 11

ஐபோன் 11  தற்போது ரூ.54,900 க்கு பதிலாக ரூ.46,999 ஆரம்ப விலையில் கிடைக்கிறது. எனவே, ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட ரூ.8,000 தள்ளுபடி விலையில் விற்பனைச் செய்யப்படுகிறது.

ரியல்மீ C12

ரியல்மீ C12 இந்தியாவில் ரூ.8,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இப்போது ரூ.7,999 (3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

போகோ X3

போகோ X3  இப்போது ரூ.14,999 ஆரம்ப விலையில் கிடைக்கிறது, இதன் அசல் விலை ரூ.16,999 ஆகும்.

ஐபோன் SE

ஐபோன் SE இந்தியாவில் ரூ.42,500 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பிளிப்கார்ட்டில், இந்த மாறுபாடு இப்போது உங்களுக்கு ரூ.29,999 விலையில் கிடைக்கிறது.

மோட்டோ G10 பவர்

மோட்டோ G10 பவர் இந்தியாவில் ரூ.9,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இப்போது ரூ.9,499 விலையில் விற்கப்படுகிறது, அதாவது ரூ.500 விலைக் குறைந்துள்ளது.

ரியல்மீ 7

ரியல்மீ 7  இந்தியாவில் ரூ.14,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இப்போது ரூ.13,499 விலையில் கிடைக்கிறது.

போகோ M2 புரோ

போகோ M2 புரோ  6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இப்போது ரூ.16,999 விலைக்குப் பதிலாக ரூ.14,999 விலைக்கு விற்கப்படுகிறது.

ஐபோன் XR

ஐபோன் XR அடிப்படை மாடல் ரூ.39,999 விலையில் கிடைக்கிறது, இது ரூ.47,900 இலிருந்து குறைந்துள்ளது. இந்த ஐபோன் இன்னும் பவர் அடாப்டர் மற்றும் இயர்பட்ஸ் உடன் வருகிறது.

iQOO 3

iQOO 3  இந்தியாவில் ரூ.36,990 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இப்போது ரூ.24,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆசஸ் ROG போன் 3

ஆசஸ் ROG போன் 3 ரூ.49,999 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அடிப்படை மாடல் இப்போது பிளிப்கார்ட்டில் ரூ.41,999 விலையில் கிடைக்கிறது.

ரெட்மி 9 பிரைம்

ரெட்மி 9 பிரைம்  ரூ.9,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இப்போது ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரியல்மீ நர்சோ 30A

ரியல்மீ நர்சோ 30A தற்போது ரூ.8,499 ஆரம்ப விலையில் விற்கப்படுகிறது, இதன் விலை ரூ.8,999 ஆகும்.

Views: - 0

0

0

Leave a Reply