ஃபாசில் ஜென் 5E ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் | இதோட விலை எவ்ளோ தெரியுமா?
3 February 2021, 11:41 amஇந்தியாவில் சமீபத்திய ஆண்ட்ராய்டு வேர் OS உடன் ஃபாசில் ஜென் 5E ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தப்படுவதாக ஃபாசில் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்வாட்ச் மாற்றக்கூடிய வாட்ச் பேண்டுகள், விரைவான சார்ஜிங் ஆதரவு, ஸ்னாப்டிராகன் வேர் 3100 SoC, பல செயல்பாட்டு சென்சார்கள் மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது.
வழக்கம் போல், ஃபாசில் ஜென் 5E – 42 மிமீ மற்றும் 44 மிமீ 22 மிமீ மாற்றி கொள்ளக்கூடிய ஸ்ட்ராப்கள் கொண்ட இரண்டு வகைகளில் உள்ளன. சமீபத்திய ஃபாசில் வாட்சின் இரண்டு வகைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விவரக்குறிப்புகளுடன் வருகின்றன.
ஃபாசில் ஜென் 5E விவரக்குறிப்புகள்
ஃபாசில் ஜென் 5E 1.19 அங்குல AMOLED தொடுதிரை டிஸ்பிளே உடன் 390 x 390 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் மற்றும் 328 ppi பிக்சல் அடர்த்தி கொண்டது. அதன் உட்புறத்தில், ஃபாசில் ஸ்மார்ட்வாட்ச் ஒரு ஸ்னாப்டிராகன் வேர் 3100 SoC செயலியை 1 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கிறது.
குறிப்பாக, ஃபாசில் ஜென் 5E 3 ஏடிஎம் நீர் எதிர்ப்பைக் கொண்டுள்ளது. PPG இதய துடிப்பு சென்சார் உள்ளிட்ட பல்வேறு செயல்பாட்டு சென்சார்கள் உள்ளன, அவை கலோரி எண்ணிக்கை, படி எண்ணிக்கை போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படலாம். இது ஒரு உள்ளடிக்கிய ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோஃபோனைக் கொண்டுள்ளது, இது கூகிள் அசிஸ்டன்ட் உடன் இணைக்க மற்றும் அழைப்புகளை எடுக்க உங்களை அனுமதிக்கிறது.
நிறுவனத்தின் தகவலின்படி, ஃபாசில் ஜென் 5E வேர் OS இயக்கும் பேட்டரி 24 மணி நேர பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இது விரைவான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது, இது 50 நிமிடங்களில் சாதனத்தை 80% வரை சார்ஜ் செய்வதாக கூறப்படுகிறது.
ஃபாசில் ஜென் 5E விலை
விலை நிர்ணயத்தைப் பொறுத்தவரையில், ஃபாசில் ஜென் 5E ஸ்மார்ட்வாட்ச் பிளாக் சிலிகான், பிரவுன் லெதர், பிளாக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், டூ-டோன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், ரோஸ் கோல்ட்-டோன் ஸ்டீல் / மெஷ் மற்றும் ப்ளஷ் சிலிகான் பதிப்புகள் உள்ளிட்ட பல விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இது ரூ.18,495 விலையில் இ-காமர்ஸ் போர்ட்டல் ஆன பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்.
0
0