செல்பி வசதியுடன் ஃபுஜிஃபில்ம் இன்ஸ்டாக்ஸ் மினி 40 இந்தியாவில் அறிமுகம் | விவரங்கள் இங்கே

26 April 2021, 11:06 am
Fujifilm Instax Mini 40 With Selfie Mode Announced For Rs. 8,499 In India
Quick Share

ஃபுஜிஃபில்ம் இன்ஸ்டாக்ஸ் தொடர் கேமரா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான கேமராவாக உள்ளது. ஜப்பானிய கேமரா நிறுவனம் தனது தயாரிப்பு பிரிவை சமீபத்திய ஃபுஜிஃபில்ம் இன்ஸ்டாக்ஸ் மினி 40 உடன் புதுப்பித்துள்ளது. பெயர் குறிப்பிடுவது போல, புதிய கேமரா மினி-ஃபார்மேட் படமெடுக்கும் அம்சத்தையும் ஆதரிக்கிறது, இது புகைப்படங்களை எடுத்து உடனடி அச்சிட உங்களை அனுமதிக்கிறது.

ஃபுஜிஃபில்ம் இன்ஸ்டாக்ஸ் மினி 40 விலை, கிடைக்கும்

புதிய ஃபுஜிஃபில்ம் இன்ஸ்டாக்ஸ் மினி 40 இந்தியாவில் ரூ.8,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஷோல்டர் ஸ்ட்ராப் உடன் வரும் ஒரு கேமரா கேஸையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது, இதை கூடுதலாக ரூ.859 செலுத்தி பெற முடியும். புதிய மினி இன்ஸ்டன்ட் கேமராவை இன்ஸ்டாக்ஸ் ஃபுஜிஃபில்ம் வலைத்தளத்திலும், அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டிலும் வாங்கலாம்.

ஃபுஜிஃபில்ம் இன்ஸ்டாக்ஸ் மினி 40 அம்சங்கள், விவரக்குறிப்புகள்

ஃபுஜிஃபில்ம் இன்ஸ்டாக்ஸ் மினி 40 சில்வர் ஃபிரேம்களுடன் இணையாக ஒரே ஒரு கருப்பு வண்ண உடலமைப்பில் கிடைக்கிறது. இதன் மேற்பரப்பு பயனரின் கையில் நல்ல பிடிப்பை வழங்குகிறது. வடிவமைப்பு விவரங்களைப் பொறுத்தவரையில், ​​இன்ஸ்டாக்ஸ் மினி 40 மேலே ஒரு அவுட்லெட் கொண்டுள்ளது, இது போட்டோ ரோல்களை ரோல் செய்ய அனுமதிக்கிறது. இந்த இன்ஸ்டன்ட் கேமரா 104 x 121 x 65 மிமீ அளவிலான ஒரு சாதனமாக உள்ளது. இது பேட்டரிகள், ஸ்ட்ராப் மற்றும் ஃபிலிம் இல்லாமல் 330 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

ஃபுஜிஃபில்ம் இன்ஸ்டாக்ஸ் மினி 40 கேமராவுக்கு ஆற்றல் அளிக்கும் இரண்டு AA அல்கலைன் பேட்டரிகளை இது கொண்டுள்ளது. ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாமல் போனால் அது தானாகவே ஆஃப் ஆகி விடும், இது பேட்டரியைப் பாதுகாக்க உதவுகிறது. இந்த இன்ஸ்டன்ட் கேமராவில் 1/2 வினாடி முதல் 1/250 வினாடி வரை திட்டமிடப்பட்ட எலெக்ட்ரானிக் ஷட்டரும் உள்ளது. எந்தவொரு கைமுறை உதவியின் தேவையையும் இல்லாமல், ஃபிலிம் வெளியீடு ஆட்டோமேட்டிக் முறையில் உள்ளது.

மிக முக்கியமாக, ஃபுஜிஃபில்ம் இன்ஸ்டாக்ஸ் மினி கேமரா ஒரு automatic exposure அம்சத்துடன் வருகிறது. சுற்றியுள்ள பிரகாசத்தை தானாக சரிசெய்ய இது உதவுகிறது. அது மட்டுமின்றி, இன்ஸ்டன்ட் கேமரா ஷட்டர் வேகம், அவுட்லெட், ஃபிளாஷ் மற்றும் பிற அமைப்புகளை சுற்றுச்சூழல் மற்றும் படப்பிடிப்பு நிலைமைகளைப் பொறுத்து தானாகவே மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், இருண்ட சூழல்களிலும் கூட இது தெளிவான நல்ல புகைப்படங்களை எடுக்க உதவியாக இருக்கும்.

ஃபுஜிஃபில்ம் இன்ஸ்டாக்ஸ் மினி 40 இன் மற்றொரு அம்சம் செல்பி பயன்முறையாகும், இதில் பயனர்கள் கேமராவின் லென்ஸின் முன் விளிம்பை வெளியே இழுத்து செல்ஃபிக்களைக் எடுக்கலாம். இயல்புநிலையாக புகைப்படங்களின் அளவு 62 x 46 மிமீ மற்றும் இது இரண்டு-காம்போனென்ட், இரண்டு-எலமென்ட் 60 மிமீ லென்ஸை ஒருங்கிணைக்கிறது மற்றும் 30 செ.மீ மற்றும் அதற்கு அப்பால் குவிய நீளத்தைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, படப்பிடிப்பு வரம்பு 30 செ.மீ முதல் 50 செ.மீ வரை கொண்டுள்ளது.

Views: - 240

0

0

Leave a Reply