குறைந்த ஆற்றலை பயன்படுத்தும் முதல் ஆளில்லா இரயில் சேவையை அறிமுகப்படுத்தி ஜெர்மனி சாதனை!!!

Author: Hemalatha Ramkumar
13 October 2021, 2:39 pm
Quick Share

ஜெர்மன் ரயில்வே நிறுவனமான டாய்ச் பான் (Deutsche Bahn) திங்களன்று தொழில்துறை குழு சீமென்ஸ் உடன் இணைந்து உலகின் முதல் தானியங்கி டிரைவர் இல்லாத ரயிலை ஹாம்பர்க்கில் அறிமுகப்படுத்தியது. இது வழக்கமான மனிதனால் இயக்கப்படும் ரயில்களுடன் ஒப்பிடும்போது அதிக நேரம் மற்றும் ஆற்றல் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.

ரயில்வே நிறுவனம் தனது S-Bahn விரைவு நகர்ப்புற ரயில் நெட்வொர்க்கில் இதுபோன்ற நான்கு ரயில்களை இயக்கும் மற்றும் டிசம்பர் முதல் பயணிகளை ஏற்றிச் செல்லும் மற்றும் ஏற்கனவே உள்ள ரயில் பாதைகளில் ஓடும் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.

பாரிஸில் டிரைவர் இல்லாத மெட்ரோ நெட்வொர்க் உள்ளது மற்றும் பல விமான நிலையங்கள் டிரைவர் இல்லாத மோனோ ரெயில் ஷட்டில்களைப் பயன்படுத்துகின்றன. ஹாம்பர்க்கின் டிரைவர் இல்லாத ரயில் மற்ற வழக்கமான ரயில்களுடன் தன் பாதையை பகிரும் முதல் இரயிலாக இருக்கும்.

இந்த தானியங்கி ரயில் சேவை என்பது ஹாம்பர்க்கின் விரைவான நகர்ப்புற இரயில் அமைப்பை நவீனமயமாக்குவதற்கான, சீமென்ஸ் மற்றும் டாய்ச் பான் 60 மில்லியன் யூரோ திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த ரயில், முழு தானியங்கி முறையில் இயங்கினாலும், அது நகரும் போது எந்த மனித தலையீடும் தேவையில்லை என்றாலும், பயணத்தின்போது அது ஒரு மனித ஓட்டுநருடன் இருக்கும் என்று டாய்ச் பான் மற்றும் சீமென்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த இரயில் அதிக செலவுகளைச் சேர்க்காமல் நல்ல செயல்திறனை தருகிறது. இது குறித்து சீமென்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரோலண்ட் புஷ் மேலும் கூறுகையில், “நாங்கள் ரயில் போக்குவரத்தை மிகவும் புத்திசாலித்தனமாக்குகிறோம். மேலும் தானியங்கி ரயில்கள் 30 சதவிகிதம் அதிக பயணிகளை கொண்டு செல்ல முடியும். கணிசமாக நேரத்தை மேம்படுத்தி 30 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆற்றலை சேமிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

Views: - 178

0

0

Leave a Reply