8000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஜியோனி M12 ப்ரோ அறிமுகம் | முழு விவரம் அறிக

9 September 2020, 1:08 pm
Gionee M12 Pro launched with Helio P60 SoC, triple rear cameras
Quick Share

ஜியோனி M12 புரோ என பெயரிடப்பட்ட புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்வதாக ஜியோனி அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரே ஒரு 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்திற்கு 700 யுவான் (தோராயமாக ரூ.7,500) விலையுடன் வருகிறது. இது வெள்ளை மற்றும் நீல நிறங்களில் பளபளப்பான பூச்சுடன் வருகிறது.

ஜியோனி M12 ப்ரோ 6.2 இன்ச் HD+ வாட்டர் டிராப் டிஸ்ப்ளேவுடன் 1520 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடனும் மற்றும் 90.3 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மாலி-G72 MP3 GPU உடன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P60 செயலி உடன் இயக்கப்படுகிறது.

மைக்ரோ SD கார்டு ஸ்லாட்டைப் பயன்படுத்தி மேலும் விரிவாக்கக்கூடிய இந்த தொலைபேசி 6 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கேமரா பிரிவில், தொலைபேசி 16 மெகாபிக்சல் முதன்மை லென்ஸுடன் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மற்ற இரண்டு கேமராக்கள் தொடர்பான விவரங்கள் தற்போது தெரியவில்லை. முன்பக்கத்தில், 13 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

தொலைபேசி ஆன்ட்ராய்டு 9.0 Pie இல் இயங்குகிறது. ஜியோனி ஜியோனி M12 ப்ரோ 4000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனருடன் வருகிறது.

இணைப்பு முன்னணியில், இது 4ஜி LTE, வைஃபை, புளூடூத் 4.0, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி-C மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றை ஆதரிக்கிறது. தொலைபேசியின் எடை 160 கிராம் ஆகும்.

Views: - 0

0

0