வெறித்தனமான 10,000mAh பேட்டரியுடன் கூடிய ஜியோனி M30 ஸ்மார்ட்போன் அறிமுகம் | விலை, விவரக்குறிப்புகள் & அம்சங்கள்

26 August 2020, 11:21 am
Gionee M30 with massive 10,000mAh battery announced
Quick Share

ஜியோனி தனது சமீபத்திய ஸ்மார்ட்போனை மிகப்பெரிய பேட்டரி உடன் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. நிறுவனம் தனது சீன சந்தையில் ஜியோனி M30 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோனி M30 போனின் விலை ரூ.1399 யுவான் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.15,000 ஆகும். இது கருப்பு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். தொலைபேசி பின் பேனலில் ஒரு ஃபாக்ஸ் லெதர் பூச்சுடன், பின்புற பேனலில் ஒற்றை கேமரா அமைப்பையும், டிஸ்ப்ளேவின் மேல்-வலது மூலையில் அமைந்துள்ள முன்-கேமராவிற்கான பஞ்ச்-ஹோல் வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்

  • ஜியோனி M30 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளை பொறுத்தவரை, 6.0 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளேவுடன் 1440 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் உள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் மாலி-G72 MP3 GPU உடன்  மீடியா டெக் ஹீலியோ P60 செயலி உடன் இயக்கப்படுகிறது. தொலைபேசியில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் உள்ளது.

கேமரா & பேட்டரி அம்சங்கள்

  • கேமரா பிரிவில், ஜியோனி M30 ஆனது 16 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் ஒற்றை LED ப்ளாஷ் உடன் ஏற்றப்பட்டுள்ளது.
  • முன்பக்கத்தில், செல்பி மற்றும் வீடியோ அழைப்புக்கு 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் உள்ளது. 
  • ஜியோனி M30 இன் முக்கிய சிறப்பம்சம் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 10,000 mAh பேட்டரி ஆகும், மேலும் இது ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவையும் ஆதரிக்கிறது. 
  • இணைப்பு அம்சங்களில், இது இரட்டை 4 ஜி VoLTE, Wi-Fi 802.11 b / g / n, புளூடூத் 4.2, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-C மற்றும் இரட்டை சிம் ஆதரவை ஆதரிக்கிறது.
  • தொலைபேசி 160.6 x 75.8 x 8.4 மிமீ அளவுகளையும் மற்றும் 305 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

Views: - 36

0

0